For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தமிழகத்தில் 21 ஆயிரம் இளைஞர் குழுக்கள்! தேர்தல் ஆணையம் அதிரடி

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தேர்தலில் ஓட்டுப்போட, கட்சிகள், பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க, 21 ஆயிரத்து, 300 இளைஞர் குழுக்களை, தேர்தல் கமிஷன் தயார் செய்துள்ளது. இதனால், இம்முறை வாக்காளர்களுக்கு, பணம் மற்றும் பரிசு பொருட்கள் சென்று சேர்க்கப்படுவதில் கட்சிகளுக்கு கடும் கஷ்டம் ஏற்படும் என்று தெரிகிறது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு சரக்கு வாகனங்களில் ஆட்களை அழைத்துச் செல்லக் கூடாது என்று 5 நாட்களுக்குள் உத்தரவுபோட வேண்டும் என்று ஹைகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதை ஏற்று, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும்.

நகைக்கடை

நகைக்கடை

கோவையில் ஒரு தங்கநகைக் கடையில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டபோது, கணக்கில் காட்டப்படாத 2.5 கிலோ தங்கம் இருப்பது தெரியவந்தது. விசாரணை நடக்கிறது. கோவையில் அதிமுக கவுன்சிலர் வீட்டிலும் வருமான வரித்துறையினரின் சோதனை நடத்தப்பட்டுள்ளது. மதுரையில் நடந்த சோதனையில் வருமான வரித்துறையினர் ரூ.20 லட்சம் கைப்பற்றியுள்ளனர்.

வருமான வரித்துறை

வருமான வரித்துறை

தமிழகத்தில் மட்டும்தான் வருமான வரித்துறையினரின் மூலம் இந்திய தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது உண்மைதான். வருமான வரித்துறையினர் மூலம் நடவடிக்கை எடுத்தால்தான், கணக்கில் வராத பணம் கைப்பற்றப்படுவதோடு, சட்ட ரீதியான கடும் நடவடிக்கையின் கீழ் குற்றவாளியை கொண்டுவர முடியும். எனவே இந்த சோதனையை இந்திய தேர்தல் கமிஷன் தொடர்ந்து நடத்தும்.

புகார் அளிக்க வேண்டிய எண்

புகார் அளிக்க வேண்டிய எண்

எந்த இடத்திலாவது அதிக அளவில் பண நடமாட்டம், சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் இருப்பது தெரிந்தால், இந்திய தேர்தல் கமிஷனுக்கு 1950 என்ற தொலைபேசி மற்றும் www.elections.tn.gov.in என்ற ஆன்லைன் அல்லது 9444123456 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலம் புகார் கொடுக்கலாம்.

வீடியோ

வீடியோ

இந்தப் புகார் அனைத்தும் தானாகவே எஸ்.எம்.எஸ். வடிவில் சம்பந்தப்பட்ட பறக்கும் படைக்கும், தேர்தல் பார்வையாளர்களுக்கும் சென்று சேரும். அவர்கள் அந்த இடத்துக்கு உடனே சென்று கண்காணிப்புப் பணியைத் தொடங்குவார்கள். நபர்களின் வருகைகளை மறைந்திருந்து வீடியோ படம் எடுப்பார்கள். பொருட்கள் எதையாவது வெளியே கொண்டு வந்தால் அதை பறக்கும் படையினர் சோதனையிடுவார்கள்.

வாரண்ட் வேண்டாம்

வாரண்ட் வேண்டாம்

சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கைகள் இருப்பது தெரிந்தால், வருமான வரித்துறையினருக்கு பறக்கும் படையினர் தகவல் கொடுப்பார்கள். அவர்கள் நீதிமன்ற வாரண்டை பெறாமலேயே அந்த இடத்துக்குள் சென்று சோதனையிட முடியும்.

புகார்கள்

புகார்கள்

வீடுகள், கட்டிடங்களுக்குள் பறக்கும் படையினர் சென்று சோதனையிட முடியாது. உண்மையான தகவல் கிடைத்தால், வருமான வரித்துறையினரை 18004256669 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம். வாட்ஸ் ஆப் மூலம் இதுவரை 861 புகார்கள் வந்துள்ளன.

21 ஆயிரம் குழு

21 ஆயிரம் குழு

இது தவிர, பணம் நடமாட்டம், பணம் பதுக்கல், பணம் பட்டுவாடா குறித்து தகவல் தெரிவிக்க, கிராமம் தோறும் இளைஞர் குழு அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும், 21 ஆயிரத்து, 300 இளைஞர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

படித்தவர்கள்

படித்தவர்கள்

இக்குழுவில், 10 முதல், 15 இளைஞர்கள் இடம் பெற்றுள்ளனர். அனைவரும், 30 வயதிற்கு உட்பட்டவர்கள். படித்தவர்கள். கட்சி சாராதவர்கள். இவர்கள் பணம் பதுக்கல் குறித்து, அதிகாரிகளுக்கு தகவல் அளித்து வருகின்றனர். தேர்தலில் பணம் பட்டுவாடாவை தடுப்பதில், இவர்களின் பங்கு பெரிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதி பட்டியல்

இறுதி பட்டியல்

அவர்களிடம் இருந்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு பெயர் சேர்க்க பலர் விண்ணப்பித்திருந்தனர். அந்த விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்கப்பட்டு துணைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 29ம் தேதி அது வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதனால், இம்முறை வாக்காளர்களுக்கு, பணம் மற்றும் பரிசு பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என, தெரிகிறது.

English summary
Monitoring committee has been set up in Tamilnadu villages to prevent money distribution.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X