களை கட்டிய விநாயகர் சதுர்த்தி.. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 1000 சிலைகள் பிரதிஷ்டை
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆயிரம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆயிரம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்றைய விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. நெல்லை தச்சநல்லூர் வரம்தரும் பெருமாள் கோயிலில் 7 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேலப்பாளையம் குறிஞ்சி சொக்கநாதர் கோயிலில் 9 அடி உயர வியநாகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை கோ பூஜை, கூட்டு பிராத்தனை, விநாயகர் அலங்கார பூஜை, ரக்சா பந்தன் விழா நடக்கிறது. இதையடுத்து மாலையில் வீடுகளில் பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் சொக்கநாதர் கோயில் சன்னதி திடலுக்கு எடுத்து வரப்படுகிறது.
மாலை 5 மணி அளவில் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் அவை கரைக்கப்படுகிறது. இதே போல் நெல்லை மாநகர் மற்றும் மாவட்டத்தில் இந்து அமைப்பு சார்பில் சுமார் 600 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இவைகளுக்கு இன்று சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் நடக்கிறது. பின்னர் நாளை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படுகிறது. விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், சாத்தான்குளம் உள்பட மாவட்டம் முழுவதும் சுமார் 400 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வருகிற 27ம் தேதி முதல் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுதது செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications