படுகாயமடைந்த நிலையிலும் குழந்தைக்கு பாலூட்டிய தாய் - நாகர்கோவில் விபத்தில் நெகிழ்ச்சி!
நாகர்கோவில் : நாகர்கோவிலில் நேற்று நடைபெற்ற விபத்தில் படுகாயமடைந்த தாய் ஒருவர் அந்த நிலையிலும் குழந்தைக்கு பாலூட்டிய சம்பவம் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
பணகுடி அருகே நேற்று நடந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் குமரி ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர்.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு காலை 6 மணியில் இருந்தே படுகாயம் அடைந்தவர்கள் ஆம்புலன்சுகளில் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்காக டாக்டர்கள் குழுவினர், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் இருந்தனர்.
காயமடைந்தவர்களுக்கு அவசர, அவசரமாக சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் படுகாயம் அடைந்த பெண்ணின் மார்பில் குழந்தை தூங்கியவாறு இருந்தது. அந்த குழந்தையை செவிலி ஒருவர் எடுத்த போது கதறி அழுதது. அதன் பிறகே குழந்தை , தாயிடம் பால் குடித்து கொண்டிருந்தது தெரிய வந்தது.
உயிருக்கு போராடிய நிலையிலும், அழுது கொண்டிருந்த தனது குழந்தைக்கு அந்த பெண் பால் கொடுத்து கொண்டிருந்தது தெரிய வந்தது.இந்த காட்சியை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் நெகிழ்ச்சியில் கண்ணீர் சிந்திய சம்பவம் அனைவர் மனதையும் உருக்கியது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications