11ம் வகுப்பு படிக்கும் மகளுக்குக் கட்டாயத் திருமணம்.. தாய், மாப்பிள்ளை கைது
நெல்லை: நெல்லை அருகே பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த தாய், மாப்பிள்ளை ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலை அருகே உள்ள பாலபத்திரராமபுரத்தை சேர்ந்தவர் கடற்கரை. இவருக்கு இரண்டு மனைவிகள். இவரது முதல் மனைவி செல்வக்கொடி. இவர் கமவரை பிரித்து தனியாகர மருதாள்புரம் என்ற ஊரில் வசித்து வருகிறார். இவரது மகள் அருகில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

செல்வக்கொடி தனது மகளுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தார். இதற்காக உறவினரான ஊத்துமலை அருகேயுள்ள வேலாயுதபுரத்தை சேர்ந்த பசும்பொன் என்பவரை மாப்பிள்ளையாக பார்த்து பேசி முடித்தார். இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோயிலில் வைத்து திருமணம் நடந்தது. இதுகுறித்து அறிந்த பெண்ணின் தந்தை கடற்கரை மைனர் பெண்ணான தனது மகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளதாக கூறி ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ஞானசெல்வம் விசாரணை நடத்தி மாணவியின் தாய் செல்வக்கொடி, மாப்பிள்ளை பசும்பொன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் மாப்பிள்ளையின் தந்தை மற்றும் உறவினர்கள் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு பிறகு மாணவி அவரது தந்தையிடம் ஓப்படைக்கப்பட்டார். கைதான பசும்பொன் தூத்துக்குடியில் உள்ள ஓரு தனியார் ஸ்கேன் சென்டரில் வேலை பார்த்து வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications