Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘முரட்டுப் பக்தன்’.. தொழிற்சங்கப் போராளி.. பெரியசாமியின் இழப்பு உலுக்கி எடுக்கிறது-ஸ்டாலின் உருக்கம்

முரட்டு பக்தன் என்று திமுக தலைவரால் அழைக்கப்பட்ட பெரியசாமியின் இழப்பு உலுக்கி எடுக்கிறது என்று மு.க. ஸ்டாலின் தனது இரங்கல் குறிப்பில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக மாவட்ட செயலாளர் என். பெரியசாமி உடல் நலக் குறைவால் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் இன்று காலமானார்.

அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் திமுக 3 நாள் துக்கம் அறிவித்துள்ளது. திமுகவின் நிகழ்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.
என். பெரியசாமியின் மறைவிற்கு திமுகவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பு:

அதிர்ச்சி

அதிர்ச்சி

"என்னுடைய முரட்டுப் பக்தன்" என்று தலைவர் கலைஞர் அவர்களால் பாசத்துடன் அழைக்கப்பட்ட தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் திரு பெரியசாமி அவர்களின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். கழகத்தின் போர்க்குணமிக்க மாவட்டக் கழக செயலாளராக திகழ்ந்த அவரது மறைவிற்கு தலைவர் கலைஞர் அவர்கள் சார்பிலும், என் சார்பிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெருமை மிக்கத் தொண்டர்

பெருமை மிக்கத் தொண்டர்

அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், சொந்தங்களுக்கும், கழக தொண்டர்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். தலைவர் கலைஞர் அவர்கள் மீது தன் உயிரையும், என் மீது தனிப்பட்ட பாசத்தையும் வைத்திருந்தவர் அண்ணன் தூத்துக்குடி பெரியசாமி அவர்கள் என்பதை நினைக்கும் போது, பெருமைமிக்க தொண்டரை இழந்த சோகம் எங்களை உலுக்கிக் கொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு அவரை மருத்துவமனையில் சந்தித்து உடல் நலம் விசாரித்தேன். நலமுடன் திரும்பி வருவார் என்று நம்பிக் கொண்டிருந்த எங்களுக்கு அவரது மறைவு பேரதிர்ச்சியை தந்திருக்கிறது.

தொழிலாளர் உரிமைக்கு குரல்

தொழிலாளர் உரிமைக்கு குரல்

1960-ம் வருடத்தில் இந்த பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அண்ணன் தூத்துக்குடி பெரியசாமி அவர்கள் வட்டக் கழகச் செயலாளர் முதல் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வரை கழகத்தினரின் செல்வாக்கைப் பெற்றும், தூத்துக்குடி நகர்மன்றத் தலைவர் முதல் சட்டமன்ற உறுப்பினர் வரை மக்கள் செல்வாக்கை பெற்றும், மதுராகோட்ஸ் பஞ்சாலை தொழிலாளர், ஸ்பின்னிங் மில் தொழிலாளர், உப்பு மற்றும் தலைசுமை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட 36 தொழிற்சங்கங்களின் தலைவராக இருந்து "தொழிலாளர் வர்க்கத்தின்" உரிமைகளுக்காகவும் வாதிட்ட பெருமைக்குரியவர்.

கழக உணர்வு தேங்கி நிற்கும்

கழக உணர்வு தேங்கி நிற்கும்

30 வருடங்கள் கழகத்தின் மாவட்டச் செயலாளராக விளங்கிய அண்ணன் தூத்துக்குடி பெரியசாமி அவர்கள் கழகத்திற்காகவும், மக்களுக்காகவும் வாழ்நாள் எல்லாம் பாடுபட்ட அவருக்கு "கலைஞர் விருது" வழங்கி சிறப்பிக்கப்பட்டார். அவர் பிரிந்தாலும் அவரிடம் உள்ள "கழக உணர்வு" எப்போதும் தலைமுறை தலைமுறையாக நம்மிடையே தங்கி நிற்கும் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+