ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர் நாளை மனு தாக்கல்!
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் நாளை மனு தாக்கல் செய்கிறார்.
சென்னை : ஆர்.கே நகர் இடைதேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் நாளை வேட்புமனு தாக்கல் செய்வார் என்று அந்த கட்சி அறிவித்துள்ளது.
மறைந்த ஜெயலலிதாவின் சென்னை ஆர்கே நகர் தொகுதிக்கு வருகிற டிசம்பர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் களத்தில் திமுக, அதிமுக, தினகரன், பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. திமுக வேட்பாளராக மருதுகணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் வேட்பாளர் யார் என்பது நாளை இறுதி செய்யப்பட உள்ளது.

திமுக போலவே நாம் தமிழர் கட்சியும் கடந்த முறை இடைத்தேர்தலின் போது வேட்பாளராக போட்டியிட்ட கலைக்கோட்டுதயமே இந்த முறையும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கலைக்கோட்டுதயம் நாளை காலை 11 மணியளவில் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனுத் தாக்கலைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் பவர் ஹவுஸ் மேம்பாலம் அருகில் உள்ள தொகுதி அலுலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான தலைமையில் இடைத்தேர்தல் பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெறும் என்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழன் தொலைக்காட்சியை கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் கலைக்கோட்டுதயம். சமூக பணி, தமிழ்த்தேசியம் மீது பற்று கொண்ட கலைக்கோட்டுதயம் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார். தற்பொழுது நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications