அதிக அளவில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை – நாம் தமிழர் கட்சி அறிக்கை
சென்னை: விவசாயிகள் பாதிக்கப்படாமல் நெல் விற்பனையை மேற்கொள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களை அதிகமாகத் திறக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த சீமான் அறிக்கையில், ''தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தற்போது தீவிர நெல் அறுவடை நடந்து வருகிறது.
வடகிழக்கு மழையின் துணையால் கடந்த வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் ஓரளவுக்கு நல்ல விளைச்சல் கிட்டியிருக்கிறது. ஆனால், அவற்றை உரிய விலைக்கு விற்க போதிய நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் விவசாயிகள் மிகுந்த கவலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

ஒரு சில கொள்முதல் நிலையங்களில் நெல் ஈரப்பதமாக இருப்பதாகக் கூறி நெல்லைத் திருப்பி அனுப்புவதாகவும், இதனால் வெளி வியாபாரிகளிடம் மிகக்குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதாகவும் விவசாயிகள் புலம்பி வருகிறார்கள். எனவே, இந்தப் பிரச்னையில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு விவசாயிகளின் விடிவுக்கு வழிசெய்ய வேண்டும்.
போதுமான நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்தும், கொள்முதல் கெடுபிடிகளைத் தளர்த்தியும், அதிகாரிகள் விவசாயிகளை உரிய மரியாதையுடன் நடத்த அறிவுறுத்தியும் அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல இக்கட்டுகளைக் கடந்து அறுவடையை முடித்திருக்கும் விவசாயிகள் உரிய பலனை அடைய அரசு உடனடியாக வழிசெய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications