தமிழக மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்கள்.. நாகை மீனவர்கள் ஸ்ட்ரைக்!
நாகப்பட்டினம்: நாகை மீனவர்கள் 24 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தி உள்ளனர். தமிழக மீனவர்களின் உபகரணங்களைப் பறித்து இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் செய்துள்ளனர். இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியத்தைக் கண்டித்து நாகை மீனவர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் அவர் உட்பட முரளி, சாமிநாதன், வெற்றிவேல், அன்பரசன் ஆகிய 5 பேர் மீன் பிடிக்கச் சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே நாகை மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு அதிவேக படகில் வந்த 6 பேர் கொண்ட இலங்கை கடற்கொள்ளையர்கள், தமிழக மீனவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி உள்ளனர். மீனவர்களை கொடூரமாகத் தாக்கியதோடு, அவர்களிடம் இருந்த வலை, ஜிபிஎஸ் கருவி, மீன்கள் உள்ளிட்ட தளவாட பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
அதே போல் செருதூரை சேர்ந்த மாணிக்கவேல் என்பருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 2 ஆம் தேதி சென்ற சற்குணம் (38), சுகந்தன் (39), விஸ்வநாதன் (27), சூசைராஜ் (55), ஏசுதாஸ்(40) ஆகிய 5 மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 15 நாட்டிகல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது 2 படகில் வந்த 6 பேர் நாகப்பட்டினம் மீனவர்களை கொடூரமாக தாக்கிவிட்டு, உபகரணங்களை கொள்ளையடித்துச் சென்றனர். காயமடைந்த 19 மீனவர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதேபோல வெள்ளப் பள்ளம் மீனவ கிராமத்தை சேர்ந்த 5 மீனவர்கள் மீதும் கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர்.
காயமடைந்த தமிழக மீனவர்கள் நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தங்களை அதிவேக படகில் வந்து சுற்றி வளைத்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், இரும்பு, கத்தி, ராடு உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து கொடூரமாக தாக்கியதாகவும் காயமடைந்த மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இவர்கள் தவிர மேலும் சில மீனவர்களையும் இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அவர்கள் படுகாயமடைந்த நிலையில் உடமைகளை இழந்து கரைக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு தமிழக மீனவர்கள், பாதுகாப்புடன் மீன் பிடித்தொழிலில் ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
தாக்குதலால் படுகாயம் அடைந்த நாகை மீனவர்கள் உடமைகளை இழந்துள்ளதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்ட மீனவர்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துத் தப்பிச் சென்ற இலங்கை கடற்கொள்ளையர்களின் செயல் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியத்தைக் கண்டித்து நாகை மீனவர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி இன்று செருதூர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 300-க்கும் அதிகமான பைபர் மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி வருவதை தடுக்க வேண்டும் எனக் கோரி மீனவர்கள் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ளனர். தமிழக மீனவர்களின் கண்ணீர் குரலுக்கு அரசு செவிசாய்க்குமா?
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications