மிரட்டுகிறது விஷால் குரூப். நாமக்கல் நாடக நடிகர்கள் பரபரப்பு புகார்
நாமக்கல்: அரசியல் கட்சிகளின் அடாவடிகளுக்கு சற்றும் சளைக்காததாக இருக்கிறது நடிகர் சங்கத் தேர்தல். நடிகர் சங்க தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என நடிகர் விஷால் மிரட்டியதாக நாமக்கல் நாடக நடிகர் சங்க தலைவர் நாமக்கல் மாவட்ட எஸ்.பியிடம் புகார் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட நாடக நடிகர் சங்க தலைவராகவும், தென்னிந்திய நடிகர் சங்க பொறுப்பிலும் இருப்பவர் நாமக்கல்லைச் சேர்ந்த ஆட்டோ ராஜா. இவர் தனது வழக்கறிஞர் அய்யாவு உடன் நாமக்கல் எஸ்.பி அலுவகத்திற்கு வந்து ஒரு புகார் மனுவை கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நேற்று முன்தினம் எனது வீட்டிற்கு ஒரு நான்கு சக்கர வாகனத்தில் வந்த கும்பல், வரும் நாட்களில் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் விஷால் குழுவைச் சேர்ந்தவர்கள் நாமக்கலில் பிரச்சாரத்திற்கு வர உள்ளனர். அவர்களுக்கே நீங்கள் ஒட்டு போட வேண்டும் இல்லாவிட்டால் உங்களை கடத்திச் சென்று விடுவோம் என மிரட்டினார்கள்.

இதையடுத்து நான் எனது வழக்கறிஞர் அய்யாவு உடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார்மனு வழங்க வந்தேன். மேலும் தேர்தல் முடியும் வரை எனக்கு பாதுகாப்பு தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவித்தார்.
அப்போது அவருடன் நாடக நடிகர் சங்கத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் இருந்தனர். இந்தப் புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications