For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

''ஏலேலோ ஐலேசா.. இல.கணேசன் வர்ராரு ஐலேசா''... மீனவர்களிடம் ஓட்டு வேட்டை!

|

சென்னை: தென் சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மூத்த தலைவர் இல.கணேசன், இளந்தாரிகளுக்கு இணையாக பிரசாரத்தில் கலக்கி வருகிறார்.

சென்னை அருகே கடலோர மீனவர் குப்பங்களுக்குச் சென்ற இல.கணேசன் மீனவர்களிடம் ஓட்டு வேட்டையாடினார். பின்னர் படகில் ஏறி கடலுக்குள்ளும் ஒரு ரவுண்டு அடித்தார். ஆனால் மோடி அலையை விட கடல் அலை அதி வேகமாக இருந்ததால் கால் மணி நேரத்திலேயே அத்தனை பேரும் கரைக்குத் திரும்பி விட்டனர்.

நைனார்குப்பம் வரவேற்குது நைனா கணேஷ்...!

நைனார்குப்பம் வரவேற்குது நைனா கணேஷ்...!

கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள நைனார் குப்பம் என்ற மீனவர் கிராமத்திற்கு பாஜகவினர் புடை சூழ இல.கணேசன் சென்றார். கூடவே சில கூட்டணிக் கட்சியினரும் திரண்டு சென்றனர்.

வாங்கோ வாங்கோ

வாங்கோ வாங்கோ

கடற்கரையோரம் மீனவ மக்கள் திரண்டு காத்திருந்தனர். அங்கு நரேந்திர மோடி, இல.கணேசனின் ராட்சத பேனர்களும் கட்டப்பட்டிருந்தன. போஸ்டர்களும் நீக்கமற நிறைந்திருந்தன.

போஸ் போஸ்... ப்ளீஸ் பாஸ்

போஸ் போஸ்... ப்ளீஸ் பாஸ்

பின்னர் மீனவர்களிடம் வாக்கு சேகரித்தார் இல.கணேசன். பின்னர் அவர்களுடன் நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டார். பின்னர் பாஜக ஆட்சிக்கு வந்ததும் மீனவர்களின் பிரச்சினை தீர்க்கப்படும் என்று உறுதியளித்தார்.

வாங்க ஒரு ரவுண்டு அடிக்கலாம்

வாங்க ஒரு ரவுண்டு அடிக்கலாம்

அதன் பிறகு படகு சவாரி.. வீட்டில் அப்பா ஆபீஸுக்குப் போனால் குட்டீஸ்கள் பைக்கில் ரவுண்டு போய் விட்டு வருவார்கள் இல்லையா.. அதே போல, இல.கணேசனையும் ஒரு படகு ரவுண்டு கூட்டிப் போனார்கள் மீனவர்கள்.

பார்த்துப் பார்த்து படகு கவுந்துரப் போகுது...

பார்த்துப் பார்த்து படகு கவுந்துரப் போகுது...

இல.கணேசனும்சிலரும் ஒரு படகில் ஏறிக் கொண்டனர். அந்த மோட்டார் பொருத்தப்பட்ட படகு சீறிப் பாய்ந்தபடி கடலுக்குள் சென்றது.

வாங்கய்யா நாமளும் போலாம்

வாங்கய்யா நாமளும் போலாம்

அடுத்து தேமுதிக, பாஜக, மதிமுக, பாமகவினர் சிலரும் இன்னொரு படகில் ஏறி உள்ளே விரைந்தனர்.

கால் மணி நேரத்தில் ரிட்டர்ன்

கால் மணி நேரத்தில் ரிட்டர்ன்

ஆனால் கடலில் அலை வேகமாக இருந்ததால் இல.கணேசன் படகு உள்பட அத்தனை பேரின் படகும் கால் மணி நேரத்திலேயே கரைக்குத் திரும்பி விட்டன.

மோடி அலை ஜாஸ்தியா இருக்கே

மோடி அலை ஜாஸ்தியா இருக்கே

படகு திரும்பி வந்ததும் அதில் ரைடு போன ஒருவர் கூறுகையில், மோடி அலை வேகமாகவே இருக்கிறது என்றார் சிரித்தபடி.

நல்லாத்தாய்யா கிளப்புறீங்க.. பீதிகளை....!

English summary
Electioneering in the Chennai South Lok Sabha constituency went offshore with BJP candidate L Ganesan leading a 'NaMo Boat Rally' to seek votes at various coastal fishing hamlets. At Nainakuppam, a tiny coastal village off the East Coast Road, a huge banner featuring life size images of BJP prime ministerial candidate Narendra Modi and Ganesan holding fish, welcomed voters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X