அசைவற்று கருணாநிதி படுத்திருப்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை... நாஞ்சில் சம்பத் உருக்கம்!
திமுக தலைவர் நலம்பெற வேண்டி தொண்டர் ஒருவர் கடந்த ஒரு வாரமாக இரவு பகலாக கோபாலபுரம் மற்றும் காவேரி மருத்துவமனை முன்பு காத்துக்கிடக்கிறார்.
சென்னை: திமுக தலைவர் நலம்பெற வேண்டி தொண்டர் ஒருவர் கடந்த ஒரு வாரமாக இரவு பகலாக கோபாலபுரம் மற்றும் காவேரி மருத்துவமனை முன்பு காத்துக்கிடக்கிறார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் மூன்றாவது நாளாக சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பலரும் விசாரித்து வருகின்றனர்.
காலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு சென்றனர். ஐசியூ பிரிவில் சிகிச்சை பெறும் கருணாநிதியை முதல்வரம் துணை முதல்வரும் நேரில் பார்த்தனர்.
இதைத்தொடர்ந்து நாஞ்சில் சம்பத் காவேரி மருத்துவமனைக்கு சென்றார். கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் அவர் நலம் விசாரித்தார்.

அண்ணா ஆராதித்த
பின்னர் மருத்துவமனை வளாகத்தில் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அண்ணா ஆராதித்து மகிழ்ந்த தம்பி கருணாநிதி என நாஞ்சில் சம்பத் புகழாரம் சூட்டினர்.

அசைவற்று படுத்திருப்பதை
அவர் மேலும் பேசியதாவது, கருணாநிதி நலிவுற்றிருப்பதை அறிந்து இரு மூன்று தினங்களாக உறக்கமின்றி கண்ணீர் வடிக்கிறேன். அசைவற்று கருணாநிதி படுத்திருப்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

கடைசி நம்பிக்கை
அச்சம் நீங்கிய தமிழகத்தின் ஆணிவேர். மிச்சமிருந்த தமிழகத்தின் கடைசி நம்பிக்கை திமுக தலைவர் கருணாநிதி; அவரின் உடல்நலம் குன்றியிருப்பதை கண்டு கண்ணீர் வடிக்கிறேன்

தாலி எடுத்து கொடுத்தவர்
தமிழகத்திற்கு என்னை அறிமுகம் செய்தவர் கருணாநிதி. தாலி எடுத்துக் கொடுத்து எனது திருமணத்தை நடத்தி வைத்தவர் கருணாநிதி.
|
காலனை யாசிக்கிறேன்
பின்னர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனை முன்பு காத்திருக்கிறார். கையில் திமுக கொடியை சுமந்துகொண்டும் கழுத்தில் கருணாநிதியின் படத்தை மாட்டிக்கொண்டும் தலைவரை காணமாட்டோமா என காத்துக்கிடக்கிறார் அன்பு.












Click it and Unblock the Notifications