தேர்தல் பணியாற்ற அம்மாவின் கட்டளைக்காகக் காத்திருக்கிறோம்: "டிஸ்மிஸ்" நாஞ்சில் சம்பத்
சென்னை: தேர்தலில் களப்பணியாற்ற அம்மாவின் கட்டளைக்காக காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார் அதிமுகவின் கொள்கை பரப்புத் துணை செயலாளர் பதவியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட நாஞ்சில் சம்பத்.
ஊடகங்களில் விவாத நிகழ்ச்சிகளில் அனல் தெறிக்க பேசி வந்தவர் நாஞ்சில் சம்பத். சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அளித்த திகுடு முகடான பேட்டியால் திக்குமுக்காடி போயினர் அதிமுகவினர்... சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் புழுதி பறக்க, அதிமுகவின் துணை கொ.ப.செ பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார் நாஞ்சிலார்.

உள்ளம் துடிதுடிக்க ஜனவரி 5ம் தேதி போயஸ்கார்டனுக்கு நேரில் சென்று உருக்கமான கடிதம் ஒன்றை அளித்தாராம். அதில், உடல்நலம் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்ற தன்னை மருத்துவமனையில் அனுமதித்து தன்னை காப்பாற்றியது, தனது இல்லத் திருமண விழாவை நடத்தி வைத்தது, என முதல்வர் ஜெயலலிதா செய்த பல உதவிகளை குறிப்பிட்டுள்ளாராம்.
கட்சியின் கடைக்கோடி தொண்டனாக கடைசி வரைக்கும் விசுவாசமாக இருப்பேன் என்றும் அந்த கடிதத்தில் உருகியுள்ளாராம்.
பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டாலும் அதிமுகவின் ஊடகத் தொடர்பாளர்தான் என்று கூறியுள்ளார் நாஞ்சில் சம்பத். ஆவடி குமார், பண்ருட்டி ராமச்சந்திரன், சி.ஆர்.சரஸ்வதி, பேராசிரியர் தீரன், டாக்டர் சமரசம் ஆகியோரை ஊடக விவாதங்களில் கலந்துகொள்ள அம்மா ஆணையிட்டு இருக்கிறார். சுதந்திரமாகச் செயல்பட்டு வருகிறோம். இங்கு சொற்பொழிவாளர்கள் மனநிறைவோடு இருக்க முதல்வர் எல்லாவித ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.
இத்தனை ஆண்டுகால அரசியலில் இருந்தும் எனக்கு தேர்தல் அரசியல் மீது ஈடுபாடு இல்லை. நான் ஒரு சொற்பொழிவாளன். மக்களின் மாற்றங்களுக்காக மக்களிடம் பேசுபவன். அதுதான் எனக்குப் பிடித்திருந்தது. மக்களிடம் அரசியல் பார்வையை ஏற்படுத்துவதே எனது நோக்கம். இன்னமும் அதற்கான பயணம் போய்க்கொண்டே இருக்கிறது என்று கூறுகிறார் சம்பத்.
எதிர்வரும் தேர்தல் என்பது அம்மாவின் முதல்வர் பதவியைப் புதுப்பித்துக்கொள்ளும் நேரமே. அதில் என்ன வியூகம் வைத்திருக்கிறார் என்பது எங்கள் தலைமை, எங்களுக்குத் தேவைப் படுகிற நேரத்தில் தெரிவிக்கும். வேண்டுமென்றால், சூழ்நிலையைப் பொறுத்து, கூட்டணி தேவைப்பட்டால் தெரிவிப்பேன் என்று சொல்லி இருக்கிறார். தேர்தல் பணியாற்ற அவரின் கட்டளைக்காகக் காத்திருக்கிறோம் என்று முடித்துள்ளார் நாஞ்சில் சம்பத்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications