மிடாஸ் சரக்கு விற்பனையாக ஜெ.வை எதிர்த்து கருணாநிதி குடும்பத்தில் கூட்டு வைத்த சசி
மிடாஸ் மதுபான சரக்குகளை திமுக ஆட்சியிலும் சசிகலா விற்று கொள்ளை லாபம் சம்பாதித்தது எப்படி என்பதை போட்டுடைத்திருக்கிறார் மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.
சென்னை: தமக்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலை சரக்குகளை திமுக ஆட்சியிலும் சசிகலா அமோகமாக விற்பனை செய்தது எப்படி என்ற உண்மையை போட்டுடைத்துள்ளார் ஓபிஎஸ் அணியில் உள்ள நத்தம் விஸ்வநாதன்.
சசிகலாவுக்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலை சரக்குகள் அதிமுக ஆட்சியில் மட்டுமல்ல.. திமுக ஆட்சியிலும் அமோகமாக அரசால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தன. மிடாஸ் மதுபான கடந்த 15 ஆண்டுகளில் சுமார் ரூ20,000 கோடி சம்பாதித்திருக்கிறது.

ராஜாத்தி அம்மாளுடன் பேச்சு
சசிகலாவைப் பொறுத்த வரை மிடாஸ் மதுபான ஆலை வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் நிறுவனம். ஆனால் திமுக ஆட்சியில் ரகசியமாக கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளிடம் பேச்சுவார்த்தை நடத்தி மிடாஸ் சரக்குகளை விற்பனை செய்திருக்கிறார் சசிகலா.

அப்பல்லோவில் ராஜாத்தி அம்மாள்
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சசிகலா புஷ்பாவால் கடும் நெருக்கடியை எதிர்கொண்டார் சசிகலா. அப்போது அப்பல்லோ மருத்துவமனைக்கு ராசாத்தி அம்மாளை வரவழைத்து ஜாதி ரீதியாக சசிகலா புஷ்பாவிடம் பேச்சுவார்த்தை நடத்த சொன்னவரும் சசிகலாதான்.

போட்டுடைத்த நத்தம்
இதையெல்லாம் அதிமுக வட்டாரங்கள் அவ்வப்போது மறுத்தே வந்தன. ஆனால் இவை அனைத்துமே உண்மைதான் என்பதை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போட்டுடைத்துவிட்டார்.

கவலைப்படாத சசி
சென்னையில் நேற்று ஓபிஎஸ் வீட்டில் அதிமுக நிர்வாகிகளிடையே பேசிய நத்தம் விஸ்வநாதன், சசிகலா மிடாஸ் மதுபான ஆலை நடத்தியதை ஜெயலலிதா விரும்பவில்லை. ஆனால் சசிகலா அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவே இல்லை.

ராஜாத்தி அம்மாளுடன் தொடர்பு
திமுக ஆட்சியில் ராசாத்தி அம்மாளிடம் பேசி மிடாஸ் சரக்குகளை சசிகலா விற்பனை செய்தது எங்களுக்கும் தெரியும். ஜெயலலிதாவுக்கும் தெரியும். சசிகலாவின் இத்தகைய நடவடிக்கைகளால் அவரை சில சொத்துகளுடன் வெளியேற்றும் முடிவில்தான் ஜெயலலிதா இருந்தார். ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது என ஒரே போடாக போட்டு பற்ற வைத்துவிட்டார்..
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications