நாமக்கல் அருகே வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் கைது.. 20கி.மீ துரத்தி சென்று பிடித்தது போலீஸ்!
நாமக்கல்: அருகே வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 20 கிலோ மீட்டர் தொலைவு துரத்தி சென்று போலீசார் கைது செய்துள்ளனர்.
கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்களை பிடிக்க சென்ற சென்னை காவல் ஆய்வாளர் பெரியபாண்டி ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நாமக்கல் அருகே கீரம்பூரில் வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 காரில் வந்த கொள்ளையர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயற்சி மேற்கொண்டனர்.
இதையடுத்து காரில் இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தப்பியோடியவர்களை போலீசார் தேடி வந்தனர். அப்போது மேற்குப்பாலபட்டியில் வீட்டின் மேற்கூரை ஒன்றில் பதுங்கியிருந்த மற்றொரு கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கொள்ளையனை 50க்கும் மேற்பட்ட போலீசார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று போலீசார் கொள்யைர்களை கைது செய்துள்ளனர்.
மேலும் தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கோவையில் நடந்த ஏடிஎம் கொலையில் சம்பந்தம் உடையவர்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.