மனைவிக்கு தெரியாமல் பள்ளி மாணவியை மணந்த ஹோட்டல் அதிபர் கைது
நெல்லை: குழந்தையின்மையைக் காரணம் காட்டி, மனைவியை விரட்டி விட்டு 9ம் வகுப்பு பள்ளி மாணவியைத் திருமணம் செய்த ஹோட்டல் உரிமையாளரை நெல்லை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்தவர் வானுமாமலை (29). நாங்குநேரியில் ஹோட்டல் நடத்தி வரும் இவரது மனைவி பெயர் மங்களம். திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் இத்தம்பதிக்கு குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி அவர்களிடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் மங்களத்தை வீட்டை விட்டு வெளியேற்றினார் வானுமாமலை. இதனால் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார் மங்களம்.

இந்நிலையில், மங்களத்திற்குத் தெரியாமல் சமீபத்தில் நாங்குநேரி அருகே உள்ள மாஞ்சான்குளம் கிராமத்தை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியை 2-வது திருமணம் செய்து கொண்டார் வானுமாமலை.
தகவல் அறிந்த மங்களம் இது தொடர்பாக நாங்குநேரி போலீசில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து நாங்குநேரி கிராம நிர்வாக அதிகாரி கிறிஸ்தவ செல்வி மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தியதில், வானுமாமலை 15 வயதுள்ள மாணவியை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி கிறிஸ்தவ செல்வி நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். மேலும் தன்னை அடித்து கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு விரட்டியதாக வானுமாமலை மீது மனைவி மங்களமும் புகார் செய்தார். அவர்களது புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வானுமாமலை மீது 2 வழக்குகள் பதிவு செய்தனர்.
பின்னர், வானுமாமலையைக் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications