நெல்லையை உலுக்கும் கள்ளத் துப்பாக்கிகள்... சிக்கினார் அதிமுக பிரமுகர் மகன்!
நெல்லை: நெலலையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் அதிமுக பிரமுகரின் மகன் உள்பட 4 பேர் கள்ள தூப்பாக்கியுடன் சிக்கினர். இதனால் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மீண்டும் நெல்லையில் கள்ளத் துப்பாக்கிக் கலாச்சாரம் பரவி வருவதையும் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
நெல்லை மாநகர பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். பாளையங்கோட்டையில நடந்த வாகன சோதனையின் போது பைக்கில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் பதில் முன்னுக்கு பின்னாக இருக்கவே சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து பரிசோதனை செய்தனர்.

அப்போது அந்த நபரிடம் துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்கள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் பாளை சேவியர் காலனியை சேர்ந்த சுடலைக்கண்ணு என்பது தெரிய வந்தது. நெல்லை தச்சநல்லூர் அதிமுக பிரமுகரின் உறவினரான இவர் வண்ணார்பேட்டையை சேர்ந்த முகேஷ்குமாரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வாங்கியதாகவும், பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்திருப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து அவரிடம் இருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செயயபபட்ட துப்பாக்கி காவல் துறை அதிகாரிகள் பயன்படுத்தும் உயர் ரகத்தை சேர்ந்தது என்று கூறப்படுகிறது. இது ஒரே ரவுண்டில் 12 முறை சுடும் திறன் வாய்ந்தது என்றும் கூறப்படுகிறது.
நெல்லை மாநகரில் மேலும் இதுபோல் கள்ள துப்பாக்கி பலரிடம் புழக்கத்தில் இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக முகேஷ்குமார், பாளையங்கோட்டையை சேர்ந்த பிரேம்குமார், ஸ்டாலின் பிரபாகரன் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications