பெங்களூரு குண்டு வெடிப்பு- நெல்லையில் விசாரணை நடத்துகிறது கர்நாடகா போலீஸ்?
நெல்லை: பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தின் நெல்லையில் கர்நாடகா போலீசார் விசாரணை நடத்தக் கூடும் என்று கூறப்படுகிறது.
பெங்களூரு சர்ச் சாலையில் கடந்த 28 ஆம் தேதி இரவு குண்டு வெடித்தது. இதில் கிறி்ஸ்துமஸ் பண்டிக்கைக்காக உறவினர்கள் வீடுகளுக்கு சென்றிருந்த சென்னையைச் சேர்ந்த பவானி என்ற பெண் பலியானார்.

பலர் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டு வெடிப்பை நடத்தியவர்களை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 13 ந் தேதி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்ததாக கொல்காத்தவை சேர்ந்த மென்பொறியாளர் மேதி கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் ஆதரவு அமைப்புகள் தொடர் குண்டு வெடிப்பில் ஈடுபட போவதாக டிவிட்டர் மூலம் மிரட்டல் விடுத்தன.
இந்த நிலையில் கடந்த 2000ல் நடந்த பெங்களுரு குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களுக்கு கர்நாடக கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் குண்டு வெடிப்பில் ஈடுபட்டதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
2013 ஆம் ஆண்டு பெங்களுரு மல்லேஸ்வரம் பாஜக தலைமை அலுவலத்தில் வெடித்த அதே வகை குண்டுதான் தற்போது வெடித்தவை என கர்நாடக மற்றும் மத்திய உளவுத்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சிமி மற்றும் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பினர் இணைந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என தகவல் கிடைத்திருப்பதால் கர்நாடக உளவுத்துறையினர், தமிழக புலனாய்வு துறையினர், தேசிய புலனாய்வு துறையினர் ஆகியோர் இந்த அமைப்பினரை ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.
பெங்களூரு பாஜக அலுவலகத்தில் குண்டு வெடிப்பு நடந்த விசாரணையில் பழனி, கோவை, மதுரை, நெல்லையை சேர்ந்த தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 10 தீவிரவாதிகளை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனால் இந்த பகுதியில் விசாரணை நடத்த கர்நாடக போலீசார் முடிவு எடுத்துள்ளனர். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications