இந்தா பிடி லிஸ்ட்... இதுல இருக்கிற ஒரு ரவுடி கூட மிஸ் ஆகக் கூடாது.. அதிரடியில் நெல்லை போலீஸ்!
நெல்லை: நெல்லையிலை உலுக்கி வரும் கொலை, தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து மாவட்டம் போலீஸார் அதிரடி நடவடிக்கையில் குதித்துள்ளனர். எஸ்.பியை மாற்றிய கையோடு ரவுடிகள் லிஸ்ட் எடுக்கப்பட்டு மொத்தம் 1000 பேரைக் குறி வைத்து போலீஸார் களம் இறங்கியுள்ளனராம்.
இந்த பட்டியலில் உள்ள ஒரு ரவுடி விடாமல் அத்தனை பேரையும் தூக்கி உள்ளே வைக்கவும் போலீஸார் முடிவு செய்துள்ளனராம்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாதிய அடிப்படையில் கொலைகள் நடந்து வருகிறது. கிட்டத்தட்ட தினசரி ஒரு கொலை வீதம் நடந்து வருவதால் மக்கள் பெரும் அதிர்ச்சியும் பீதியும் அடைந்துள்ளனர். எங்கே எந்தக் கொலை விழுமோ என்ற அளவுக்கு மக்களை பீதிக்குள்ளாக்கி வருகிறது இந்த தொடர் கொலைகள்.

இதையடுத்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கையில் குதித்தது. சரக டிஐஜி சுமித் சரண், எஸ்.பி. நாகேந்திரன் நாயர் ஆகியோர் மாற்றப்பட்டனர். புதிய டிஜிபியாக முருகனும், எஸ்.பியாக விக்ரமனும் நியமிக்கப்பட்டனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட இரு அதிகாரிகளும், டி.எஸ்.பி.க்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினர். நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள தனிபிரிவு எஸ்.ஐக்கள் மற்றும் ஏட்டுகளுடன் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் ஆலோசனை நடத்தினார். அப்போது பல ரகசிய தகவல்கள் பரிமாறப்பட்டன.
மாவட்டம் முழுவதும் சாதிய பிரச்சினைகளை தூண்டும் வகையில் செயல்படுபவர்கள் பற்றிய விவரங்களை எஸ்.பியிடம் அவர்கள் தெரிவித்தனர். சில விவரங்கள் ரகசியமாகவும் தெரிவிக்கப்பட்டன. இதை தொடர்ந்து ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்கள் பற்றிய தகவல்களும் அவரிடம் கூறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அதிரடி நடவடிக்கை மூலம் ரவுடிகளை கட்டுப்படுத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
இதனிடையே எஸ்.பி.யின் தனிப்பிரிவு தவிர சாதிய மோதல்களை தடுக்க மற்றொரு சிறப்பு தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த தனிப்படையினர் சேகரித்த விவரங்கள் மூலம் நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதியில் மட்டும் சுமார் 1000 பேர் ரவுடிகள் பட்டியலில் இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
ஒருவர் விடாமல் அத்தனை பேரையும் தூக்கி உள்ளே போடவும் போலீஸார் முடிவு செய்துள்ளனராம். இதனால் ரவுடிகள், சமூக விரோதிகள் மத்தியில் பெரும் பீதி நிலவுகிறதாம். எங்கே என்கவுண்டர் நடவடிக்கை பாயுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளதாம்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications