தோட்டத்தில் உலவும் சிறுத்தை... பயத்தில் நெல்லை விவசாயிகள்!
நெல்லை: நெல்லை அருகே தோட்டத்தில் சிறுத்தை உலவி வருவதால் அங்கு பணிக்கு செல்லும் விவசாயிகள் பீதியில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர், சிவகிரி, குற்றாலம், புளி்யங்குடி ஆகிய 4 மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளன. இங்கு 1 லட்சம் ஏக்கர் சந்தனம், தேக்கு உள்பட பல்வேறு அரிய வகை மரங்களும், மூலிகை செடிகளும் உள்ளன. மேலும் இங்கு யானை, கரடி, மான், சிறுத்தை, காட்டு மாடு, மிளா உள்ளிட்ட பல்வேறு விலங்குகளும் உள்ளன. இவைகளுக்கு போதுமான உணவுகள் கிடைக்காமலும், தண்ணீர் இல்லாமலும் விவசாய நிலங்களிலும் தஞ்சம் புகுவது வாடிக்கையாகி விட்டது.

இந்நிலையில் புளியங்குடி அருகேயுள்ள பச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பால்சாமி. அவரது உறவினர்களுக்கு சொந்தமான 10 ஏக்கர் தோட்டம் பனையூர் ரோட்டில் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதாக பால்சாமி மற்றும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் அவர்கள் தோட்டத்திற்கு செல்லாமல் அச்சத்தில் உள்ளனர். சிறுத்தை பீதியால் அங்குள்ள சோளகாட்டில் களைகளை எடுப்பதற்கும் கூலி ஆட்கள் வர மறுப்பதாக கூறப்படுகிறது.
இந்த பகுதியை சேர்ந்த பக்கத்து கிராமங்களிலும் சிறுத்தை பயத்தால் பொதுமக்கள் இரவு நேரத்தில் வெளியே வரவே பயப்படுகின்றனர். இதுகுறி்த்து புளியங்குடி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் நடவடிககை எதுவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் வனத்துறையினர் ஒரு சிலர் வந்து சிறுத்தை கால் தடத்தை ஆராய்ந்து சுற்று புறத்தில் சிறுத்தையை தேடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியினர் இன்னும் பயத்தில் உறைந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications