நாங்களும் இப்போ "ஸ்மார்ட்"தான்.. நெல்லை மக்கள் மகிழ்ச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: மத்திய அரசு வெளியிட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நகர்ப்புற மக்களின் வாழ்வாரத்தை மேம்படுத்தும் வகையில் ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தை மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் நகரங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மத்திய அரசு ஏற்படுத்தும்.

அந்த நகரத்தில் வாழும் அனைவருக்கும் வீடு, பொருளாதார வளர்ச்சி, தூய்மையான காற்று, போக்குவரத்து வசதி, குடிநீர், மின்சாரம், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தரும்.

100 நகரங்கள்

100 நகரங்கள்

இந்த திட்டத்தின் படி இந்தியாவில் 100 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தென் மாவட்டங்களான நெல்லை,தூத்துக்குடி இடம் பிடித்துள்ளன.

நெல்லையில் மகிழ்ச்சி

நெல்லையில் மகிழ்ச்சி

இதனால் இந்த நகர மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். விரைவில் இந்த நகங்களில் ஸ்மார்ட் சிட்டி டெவலப்மெண்ட் கார்ப்பரேசன அமைக்கப்பட உள்ளது. அதற்கு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமக்கப்படும்.

ரூ. 500 கோடிக்குத் திட்டங்கள்

ரூ. 500 கோடிக்குத் திட்டங்கள்

பின்னர் நெல்லை, தூத்துக்குடி நகரங்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். ஸ்மார்ட் சிட்டியாக நெல்லை தேர்வாகி இருப்பதால் ரூ.500 கோடிக்கு திட்டம் வர வாய்ப்புள்ளது.

போக்குவரத்து நெருக்கடியை தீருங்கடே!

போக்குவரத்து நெருக்கடியை தீருங்கடே!

முதல் கட்டமாக போக்குவரத்து நெருக்கடி இல்லாத நகரமாக நெல்லை மாற்றப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Central government released smart city list, Nellai and Tuticorin people are happy that their district involved in that list.
Please Wait while comments are loading...