கன்னியாகுமரி, ஈரோடு, காஞ்சிபுரத்திற்கு புதிய கலெக்டர்கள்: 5 டிஐஜிக்கள் ஐஜிக்களாக பதவி உயர்வு
சென்னை: கன்னியாகுமரி,காஞ்சிபுரம்,ஈரோடு மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ்.நாகராஜன் மாற்றப்பட்டதை தொடர்ந்து, அவருக்குப் பதிலாக கன்னியாகுமரி மாவட்ட 49வது புதிய ஆட்சியராக சஜ்ஜன் சிங் ஆர்.சவான் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஆட்சியர் எஸ்.நாகராஜனிடம் இருந்து பொறுப்பை பெற்று கொண்டு கோப்புகளில் கையெழுத்திட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''குமரி மாவட்டத்தில் அரசின் திட்டங்களை செயல்படுத்த முயல்வேன். குமரி மாவட்ட மீனவர்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். குமரி சுற்றுலா மாவட்டம் என்பதால் சுற்றுலா வளர்ச்சிக்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்'' என தெரிவித்தார்.
மேலும் மாவட்ட ஆட்சித்தலைவராக பணியாற்றிய நாகராஜன் சிறப்பாக பணியாற்றியதாகவும், அவரது பணியை தாமும் தொடர்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தவர்
புதிய ஆட்சியர் சஜ்ஜன் சிங் ஆர்.சவான், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். பொறியியல் பட்டதாரியான இவர், ஐஐடியில் எம்.டெக் பட்டம் பெற்றுள்ளார். புனேயில் விஞ்ஞானியாக ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். 2008 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்று தமிழ்நாடு ஒதுக்கீட்டில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த அவர், முதல் முறையாக ஆட்சித்தலைவராக குமரி மாவட்டத்தில் இன்று பொறுப்பு ஏற்றுள்ளார்.
காஞ்சிபுரம் ஆட்சியர்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கே.பாஸ்கரன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் வி.கே.சண்முகம், காஞ்சிரபுரத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு ஆட்சியர்
சேலம் மாவட்ட பட்டுப்புழு வளர்ப்பு இயக்குனர் எஸ்.பிரபாகரன், ஈரோடு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகர்கோவில் ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணையர் பி.செந்தில்குமார், சேலம் பட்டுப்புழு வளர்ப்பு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டிஐஜிக்கள் பதவி உயர்வு
தமிழக காவல்துறையில் டிஐஜிக்களாக பணியாற்றி வரும் 5 பேர் ஐஜிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில், ''தமிழக காவல்துறையில் டிஐஜிக்களாக பணியாற்றி வரும், சங்கர், அமல்ராஜ், திருஞானம், சண்முக ராஜேஸ்வரன் மற்றும் ஜெயராம் ஆகியோருக்கு ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது'' எனக் கூறப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications