For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்களைக் காலில் விழ வைத்து வேடிக்கை பார்த்தாரா மு.க.ஸ்டாலின்?... புது சர்ச்சை!

Google Oneindia Tamil News

கரூர்: பெண்களை தனது காலில் விழ வைத்து அழகு பார்த்தார் மு.க.ஸ்டாலின்.. இதுதான் ஸ்டாலின் குறித்து கிளம்பியுள்ள புதிய சர்ச்சை.

ஏற்கனவே நமக்கு நாமே பயணத்தின்போது ஆட்டோ டிரைவரை அடித்து விட்டார் என்று புயல் கிளம்பியது. பின்னர் அதற்கு விளக்கம் அளித்தார் ஸ்டாலின். கிராபிக்ஸ் வேலை பார்த்து கிளப்பி விட்டு விட்டதாக கூறினார் ஸ்டாலின்.

இந்த நிலையில் பெண்களை காலில் விழ வைத்து வேடிக்கை பார்த்தார் ஸ்டாலின் என்று புதுப் பஞ்சாயத்தைக் கிளப்பி விட்டுள்ளனர்.

கரூரில் நமக்கு நாமே

கரூரில் நமக்கு நாமே

கரூர் மாவட்டத்தில் தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே திட்டப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். நொய்யல், மறவாபாளையம், கிருஷ்ணராயபுரம், குளித்தலை உள்ளிட்ட பல பகுதிகளில் பயணம் மேற்கொண்டார்.

கரும்பு விவசாயிகளுடன் சந்திப்பு

கரும்பு விவசாயிகளுடன் சந்திப்பு

மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்ட பல தரப்பு மக்களை சந்தித்து வரும் மு.க.ஸ்டாலின் கரூர் மறவாபாளையம் பகுதியில் கரும்பு விவசாயிகளை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார். அப்போது, உங்கள் குறைகளை எங்களது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சேர்ப்போம். மேலும் 2016-ல் தி.மு.க. ஆட்சி அமைக்கும்போது உங்கள் கோரிக்கை மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவோம் என்றார்.

கல்லூரி மாணவர்களுடன் சந்திப்பு

கல்லூரி மாணவர்களுடன் சந்திப்பு

தொடர்ந்து அவர் உப்பிடமங்கலம் செல்லும் வழியில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களை சந்தித்து பேசினார். உப்பிடமங்கலம்; திருமண மண்டபத்தில் நடந்த மகளிர் சுயஉதவி குழுவினருடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய மகளிர் சுயஉதவிகுழுவை சேர்ந்த பெண் ஒருவர் பேசும் போது எது எதுக்கெல்லாம் மறுவாழ்வு மையம் அமைக்கும் போது குடிகாரர்களுக்கும் மறுவாழ்வு மையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பேசினார்.

விலைவாசி குறித்து விசாரணை

விலைவாசி குறித்து விசாரணை

அதை தொடர்ந்து அவர்களிடம் ஸ்டாலின், தொடர்ந்து காணியாளம்பட்டி வாரச்சந்தைக்கு சென்ற அவர் அங்குள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பொதுமக்களிடம் விலைவாசி பற்றி கேட்டறிந்தார். குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மைலாடி கிராமத்தில் வாழை தோட்டத்திற்கு சென்று அங்குகள்ள விவசாயிகளிடம் விவசாய நிலைமைகளை கேட்டறிந்தார்.

மாற்றம் வேண்டும்

மாற்றம் வேண்டும்

தொடர்ந்து அந்த விவசாயிகளிடம் பேசுகையில், "மத்திய அரசு கிராமபுற வேலை வாய்ப்பு திட்டத்திற்கு உதவும் வகையில் விவசாயிகளுக்கு இலவச விவசாய கருவிகள் வழங்குவோம் என்றார்கள். கடந்த 4ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. மதிப்புக் கூட்டப்பட்ட விவசாயத்திற்கு உணவு பதப்படுத்தப்பட்ட மையங்கள் அமைத்து விவசாயிகளை விவசாய பங்குதாரர்கள் ஆக்குவோம் என்றார்கள். சொட்டுநீர் பாசனம் அமைத்து தருவோம் என்றார்கள் சொன்னதை ஏதாவது செய்தார்களா? இந்த ஆட்சியில் விவசாயகள் பல்வேறு இன்னல்கள் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலை மாற வேண்டுமானால் புதிய மாற்றம் ஏற்பட வேண்டும் என்றார்.

கிளம்பிய சர்ச்சை

கிளம்பிய சர்ச்சை

இந்த பயணத்தின்போது பெண்களை தனது காலில் விழ வைத்து வேடிக்கை பார்த்தார் ஸ்டாலின் என்று ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. ஸ்டாலினை வரவேற்று ஆரத்தி எடுத்த பெண்களை காலில் விழுமாறு அருகே இருந்த திமுகவினர் கூறியுள்ளனர். அப்பெண்கள் ஸ்டாலினை விட வயதில் பெரியவர்களாம். இதனால் இதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தார் ஸ்டாலின் என்று சலசலப்பு கிளம்பியுள்ளது.

அடுத்தடுத்து சர்ச்சை

அடுத்தடுத்து சர்ச்சை

ஏற்கனவெ சென்னையில் ஸ்டாலினுடன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த இளைஞருக்கு அடி, நீலகிரியில் செல்பி எடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநருக்கு அடி என்று சர்ச்சை கிளம்பிய நிலையில் இந்த காலில் விழுந்த சம்பவமும் புதிதாக சேர்ந்துள்ளது.

English summary
A new controversy has come up on DMK leader M K Stalin during his visit to Karur district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X