தை பிறந்தால் வழி பிறக்கும்... தமிழகத்தை பிடித்த சனி ஒழியும் - ஸ்டாலின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தால் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை கொளத்தூரில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை தொடக்கி வைத்த ஸ்டாலின், நலத்திட்ட உதவிகளையும் பொங்கல் பொருட்களையும் வழங்கினார்.

New government on Thai Month Says Stalin

செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறினார். தை முதல் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வந்தது. திமுக ஆட்சி காலத்தில் தை முதல்நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்றும் கூறினார்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவார்கள். தை பிறந்தால் தமிழகத்தை பிடித்துள்ள சனி ஒழியும், தமிழ்நாட்டில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆண்டாள் பற்றிய கருத்துக்கு வைரமுத்து மன்னிப்பு கேட்ட பின்னரும் அதனை பூதாகரமாக்கி வளரவிடுவது நியாயமல்ல என்றும் கூறினார்.

கருணாநிதி, அறிஞர் அண்ணா பற்றி எச். ராஜா எழுதி பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கிறார். அவரது கருத்துக்கு நான் பதில் கூற விரும்பவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK working president said, Thai piranthal Vazhi pirakkum new government in TamilNadu he added.Thai 1 day Tamil New year in DMK government Said Stalin.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற