புதுவையில் புதிதாக நியமிக்கப்பட்ட 3,080 பேர் பணி நீக்கம்: தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி !
புதுச்சேரி: புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பல்வேறு துறைகளில் புதிதாக நியமிக்கப்பட்ட 3,080 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, கேரள மாநில சட்டசபைகளுக்கு மே 16ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 19ம் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்தன. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகளும் வருமான வரித்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்துவதுடன், அரசுத் துறைகளின் செயல்பாடுகளும் தேர்தல் ஆணையத்தால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில், புதுச்சேரியில் அரசுத் துறைகளில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தன. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
இதையடுத்து புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, புதுச்சேரியில் தேர்தல் விதிகளை மீறி பல்வேறு துறைகளில் புதிதாக நியமிக்கப்பட்ட 3,080 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், எதிர்க்கட்சிகள் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications