ஜெயா டிவி இரவு பணி ஊழியர்கள் வெளியேற ஐடி அதிகாரிகள் தடையால் பரிதவிப்பு #JayaTV

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரி ரெய்டு-வீடியோ

  சென்னை: ஜெயா டிவியில் வருமான வரி சோதனை இன்று அதிகாலை முதல் நடைபெற்று வருவதால் அங்கு இரவு பணி பார்க்க சென்ற ஊழியர்கள் வெளியேற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

  வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக ஜெயா டிவி உள்ளிட்ட 20 இடங்களில் ஐடி அதிகாரிகள் இன்று அதிகாலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

  Night shift staff are not allowed to go out in Jaya TV

  இந்நிலையில் ஜெயா டிவியில் நேற்றிரவு பணிக்காக சில ஊழியர்கள் சென்றுள்ளனர். அவர்கள் பணி முடிந்த போதிலும் ஐடி சோதனையால் வெளியேற முடியவில்லை. அவர்களை அதிகாரிகள் வெளியேற அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

  இதேபோல் காலை பணிக்கு சென்றவர்களும் உள்ளே செல்ல அனுமதியில்லாததால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஊழியர்களின் உறவினர்கள் கவலையில் உள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  As IT officials conducting raids in Jaya TV, staffs who were in night shift not allowed to come out of the premises.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற