For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிஜங்கள், சொல்வதெல்லாம் உண்மை... குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலீசில் புகார்!

தொலைக்காட்சிகளில் நிஜங்கள், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிகளை நடத்தும் குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சன்டிவியில் நிஜங்கள் நிகழ்ச்சி நடத்தும் குஷ்பு, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி நடத்தும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு எதிராக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகை குஷ்பு சன் டிவியில் கடந்த சில மாதங்களாக நிஜங்கள் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இது குடும்ப பஞ்சாயத்து, கள்ளக்காதல், ஏமாற்றப்பட்டவர்களை அழைத்து ஒருமணிநேரம் பேசி அனுப்புவார். இரு தரப்பு பேச்சு வார்த்தையில் சலசலப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும்.

அடிக்கும் குஷ்பு

அடிக்கும் குஷ்பு

பெண்களை வாய்க்கு வந்தபடி திட்டுவது, ஆண்களின் சட்டையை பிடித்து அடிப்பது என தனி ராஜ்ஜியமே நடத்தி வந்தார் குஷ்பு. இது சர்ச்சையை உருவாக்கியது. பலரும் குஷ்புவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

லட்சுமி ராமகிருஷ்ணன்

லட்சுமி ராமகிருஷ்ணன்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பெரும்பஞ்சாயத்து ஆகியுள்ளது. காவல்நிலையம் வரை சென்றுள்ளது. கொலை செய்யப்பட்ட நிகழ்வுகள், கள்ளக்காதல், ஓடிப்போனவர்கள், தவிக்கும் பெற்றோர்கள் என பலரும் வந்து தொலைக்காட்சிகளில் பேசுகின்றனர்.

காவல்நிலையத்தில் புகார்

காவல்நிலையத்தில் புகார்

நடிகைகள் குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார் வழக்கறிஞர் எஸ்.எஸ்.பாலாஜி. நிஜங்கள், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிகளில் இருவரும் குடும்ப உறவுகளை அவமானப்படுத்தும் நிகழ்ச்சிகளாகும். இந்த நிகழ்ச்சிகளை நடத்தும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.எஸ்.பாலாஜி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

மனித உரிமை மீறல்

மனித உரிமை மீறல்

பாலாஜி அளித்துள்ள புகார் மனுவில், ‘நிஜங்கள்', ‘சொல்வதெல்லாம் உண்மை' நிகழச்சிகள் மனித உரிமைகள், மற்றும் குழந்தைகள் உரிமைகளை மீறி வருகிறது. குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் படத்தை ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் நிகழ்ச்சிகளில் மோசமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள்.

அவமானப்படுத்துகிறார்கள்

அவமானப்படுத்துகிறார்கள்

நிகழ்ச்சி நடத்தும் குஷ்வு, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோரும் மோசமாக பேசுகிறார்கள்.குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்பவர்கள் அதற்கான படிப்பு படித்திருக்க வேண்டும். அவர்களிடம் அந்த படிப்பு இல்லை. குடும்பம், கலாச்சார உறவுகளை அவமானப்படுத்துகிறது. இந்த நிகழ்ச்சிகளை தடை செய்வதுடன் அதை நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.

English summary
Madras High Court lawyer name Balaji has filed complaint in Chennai Police commissioner office against kushboo and lakshmi ramakrishnan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X