குழந்தை திருமணத்தை நடத்தினாலும், திருமணத்துக்கு போனாலும் தண்டனை!
நீலகிரி: திருமண வயதினை அடையாத பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீலகிரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டத்தில் நடைபெறவிருந்த குழந்தைகள் திருமணம் கலெக்டரின் உத்தரவுப்படி மாவட்ட சமூக நல அலுவலரால் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் குன்னூரில் நடைபெறவிருந்த குழந்தை திருமணம், குழந்தைகள் உதவி மையம் மூலம் நிறுத்தப்பட்டது.
குழந்தை திருமண தடைச்சட்டம் 2006 இன் படி மணமகளுக்கு 18 வயதும், மணமகனுக்கு 21 வயதும் பூர்த்தியடையாமல் உள்ளவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது தண்டனைக்கு உரிய குற்றம் ஆகும்.
18 வயது நிரம்பாத பெண்ணை திருமணம் செய்யும் ஆணுக்கு அதிகப்பட்சமாக 2 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது 1 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
குழந்தை திருமணத்தை நடத்தி வைப்போரும், திருமணத்தில் பங்கு கொண்டாலோ அல்லது ஆதரித்தாலோ அவர்களும் தண்டனைக்கு ஆளாக்கப்படுவார்கள். இக்குற்றம் ஜாமீனில் விடுவிக்க இயலாத குற்றம் ஆகும்.
குழந்தைத் திருமணம் நடைபெற்றால் குழந்தை திருமண தடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலரிடம் தகவல் தெரிவிக்கலாம். மற்றும் குழந்தை உதவி மைய தொலைபேசி 1098 க்கு தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications