வட மாநிலத்தவர்கள் நெய்வேலி என்.எல்.சிக்கு நிலம் கொடுத்தார்களா? எப்படி வேலை? ஆர்டிஐ தகவலால் ஷாக்!
கடலூர்: நெய்வேலி என்.எல்.சி நிர்வாகத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்ட பட்டியலில், நிலம் கொடுக்காத 28 வட மாநிலத்தவர்களுக்கு என்.எல்.சியில் பணி வழங்கப்பட்டுள்ளது ஆர்டிஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி இந்தியா நிறுவனத்தை அமைப்பதற்காக நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர பணி வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இருப்பினும் இந்த விவகாரத்தில் என்.எல்.சி நிர்வாகம் முறையாகச் செயல்படவில்லை என தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

1956-ஆம் ஆண்டு தொடங்கி இப்போது வரை 37,256 ஏக்கர் நிலம் என்.எல்.சி நிறுவனத்தால் நிலக்கரியை வெட்டி எடுப்பதற்காக கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலங்கள் கிட்டத்தட்ட 25 ஆயிரம் குடும்பங்களுக்கு சொந்தமானவை. கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வைத்திருந்த 25 ஆயிரம் குடும்பங்களும் சுயமரியாதையுடனும், பொருளாதார தன்னிறைவுடனும் வாழ்ந்து வந்தனர்.
அவர்களிடம் இருந்து என்.எல்.சி நிலங்களை கையகப்படுத்திய பிறகு அவர்கள் வாழ்வாதாரமான நிலமின்றி பல்வேறு வேலைகளுக்குச் சென்று வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வாழ்வதற்கு மாற்று இடங்கள் வழங்கப்படவில்லை என்றும் நிலங்களைக் கொடுத்த 25 ஆயிரம் குடும்பங்களில் 1,827 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்நிலையில் என்.எல்.சி நிர்வாகத்திற்கு நிலம் கொடுத்தும் அங்கு வேலை கிடைக்காத குப்புச்சாமி என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் என்.எல்.சி நிர்வாகத்திற்கு நிலம் கொடுத்த ஒதுக்கீட்டில் பணி பெற்றவர்கள் பட்டியலை பெற்றுள்ளார்.
தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு என்.எல்.சி நிறுவனம் பதில் அளித்துள்ளது.அதில், 1990 முதல் 2012 வரை நிலம் கொடுத்ததற்காக 862 பேருக்கு என்.எல்.சியில் பணி வழங்கப்பட்டுள்ளது. இதில் 28 வட மாநிலத்தவர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது என ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது.
நிலம் கொடுத்து வேலை பெற்றவர்களின் பட்டியலில் வட இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. என்.எல்.சி பணி வழங்கியதில் 834 பேர் மட்டுமே நிலம் கொடுத்தவர்கள் என்றும், 28 வட மாநிலத்தவர்களுக்கு எப்படி வேலை வழங்கப்பட்டது என்றும் கேள்வி எழுந்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications