அண்ணாமலையார் கோயிலில் தீபம் ஏற்ற தடையில்லை.. மூன்றாம் பிரகாரத்தில் மட்டும் ஏற்றக்கூடாது -நிர்வாகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் தீபம் ஏற்ற தடையில்லை என்று கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2ம் தேதி இரவு தீ விபத்து நிகழ்ந்தது. இதில் வீரவசந்தராயர் மண்டபம் அதிகமாக சேதம் அடைந்தது. இதில் நூற்றுக்கணக்காக புறாக்களும் மடிந்து போனது.

No ban for 'Deepam' in Thiruvannamalai temple

இந்த சம்பவம் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சில கோவில்களில் தீபம் ஏற்ற தடைவிதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபம் ஏற்ற தடையில்லை என்று கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் கிளிகோபுரத்திலுள்ள சிவகங்கை தீர்த்தம் பகுதியிலும் தீபம் ஏற்ற தடையில்லை என்று கூறியுள்ளனர்.

ஆனால் கொடிமரம் அமைந்துள்ள மூன்றாம் பிரகாரத்தில் மட்டும் தீபம் ஏற்ற தடை விதிக்கப்பட்டு உள்ளது நிர்வாகம் கூறியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Thiruvannamalai temple administration says that noo ban for 'Deepam' in temple. They have only banned to make light deepam in Kodimaram.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற