Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என் மகனோ மருமகனோ அரசியலுக்கு வரமாட்டார்கள்!- முக ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: என் குடும்பத்திலிருந்து என் மகனோ மருமகனோ அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று முக ஸ்டாலின் கூறினார்.

சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு திமுக பொருளாளர் முக ஸ்டாலின் நேற்று பேட்டியளித்தார். அப்போது அவரிடம் 'ஜெயலலிதா ஒவ்வொரு பிரச்சாரத்திலும் திமுக குடும்ப கட்சி என்றும், குடும்ப ஆட்சி என்றும் கூறுகிறார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?' என்ற கேள்வியை முன் வைத்தனர்.

No more political heir from my family - MK Stalin

இதற்கு பதிலளித்த ஸ்டாலின், "சசிகலாவை பக்கத்தில் வைத்துக்கொண்டு, அதனை மூடி மறைப்பதற்காக, அவர்கள் குடும்ப ஆட்சி நடத்திக்கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையில், திட்டமிட்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக செய்யக் கூடிய ஒரு யுக்தி இது. வேறு ஒன்றும் அல்ல.

நான் 45 ஆண்டு காலமாக அரசியலில் இருக்கிறேன். அதுவும் திமுகவில் கிளைக் கழகத்தில் இருந்து தொடங்கி, நகரக் கழகம், பகுதிக் கழகம், மாவட்டக் கழகம், தலைமைக் கழகம் என படிப்படியாக வளர்ந்து வந்திருக்கிறேன். ஆகவே என்னை வைத்து அவர்கள் சொல்வதை நிச்சயம் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்," என்றார்.

உங்கள் குடும்பத்தில் இருந்து இனி யாராவது அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? என்று கேட்டதற்கு, "நிச்சயமாக எனது மகனாக இருந்தாலும் சரி, எனது மருமகனாக இருந்தாலும் சரி, எங்கள் வீட்டில் இருக்கக் கூடிய யாராக இருந்தாலும் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்பதை நான் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+