நாம் ஒரு தாய் மக்கள்... யாரும் பிரிக்க முடியாது.. இணைைப்புக்குப் பின் ஓபிஎஸ் முழக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன-வீடியோ

  சென்னை: நல்ல நாளில் ஒன்றாக இணைந்துள்ளோம். நாம் அனைவரும் ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகள். எங்களை யாராலும் பிரிக்க முடியாது என்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பேசிய ஓபிஎஸ் கூறியுள்ளார்.

  கடந்த 6 மாதமாக பிளவுபட்டிருந்த அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இன்று ஒன்றாக இணைந்துள்ளன.

  6 மாதம் கழித்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் ஒருவருக்கொருவர் கை குலுக்கி இணைந்தனர்.

  ஒன்றாக இணைந்தோம்

  ஒன்றாக இணைந்தோம்

  இணைப்புக்குப் பிறகு நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் தொண்டர்கள் மத்தியில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், இந்த நல்ல நாளில் அனைவரும் ஒன்றாக இணைந்துள்ளோம் என்றார். பிரிந்தவர்கள் இன்று ஒன்றாக இணைந்திருக்கிறோம்.

  ஒருதாய் வயிற்று பிள்ளைகள்

  ஒருதாய் வயிற்று பிள்ளைகள்


  நாம் அனைவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள். அம்மாவின் ஆன்மாதான் நம்மை ஒன்றாக இணைத்துள்ளது
  அசைக்க முடியாத எஃகுக் கோட்டை அதிமுக. சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்தாலும் அதை மறந்து ஒன்றிணைந்திருக்கிறோம்

  யாராலும் பிரிக்க முடியாது

  யாராலும் பிரிக்க முடியாது

  இந்த இயக்கத்தை ஜெயலலிதா உருவாக்கியதன் உண்மையான நோக்கத்தை உணர்ந்து ஒன்றிணைந்திருக்கிறோம். இனி எங்களை யாரும் பிரிக்க முடியாது. என் மனதில் இருந்த பாரம் இன்றோடு குறைந்து விட்டது என்று கூறியுள்ளார் ஒ.பன்னீர் செல்வம்.

  வரலாற்று சாதனை படைப்போம்

  வரலாற்று சாதனை படைப்போம்

  அதிமுக என்னும் எஃகுக்கோட்டையை யாராலும் அசைக்க முடியாது. ஜெயலலிதாவின் ஆன்மாவின் ஆசைப்படியே ஒன்றாக இணைந்திருக்கிறோம். வரலாற்று சாதனை படைப்போம் என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  O.Pannerselvam said, in the party office, From now on, we will work towards fulfilling Amma's dreams says OPS. No one can separate us. We are fulfilling the dreams of crores of cadres and doing this merge

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற