For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடு முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: நடிகை நக்மா

Google Oneindia Tamil News

புதுவை: நாடு முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதாக அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளரான நடிகை நக்மா தெரிவித்துள்ளார்.

புதுச் சேரி மாநில மகளிர் காங்கிரஸ் செயவீரர்கள் கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் கம்பன் கலையரங்கத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கமிட்டி யின் பொதுச் செயலாளர் நக்மா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்.

முன்னதாக புதுச்சேரியில் மகளிர் அணி நிர்வாகிகளை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நக்மா கூறியதாவது,

பெண்களுக்கு பாதுகாப்பில்லை...

பெண்களுக்கு பாதுகாப்பில்லை...

நாடு முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. புதுச்சேரியில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

புதுச்சேரியிலும் அதே நிலை...

புதுச்சேரியிலும் அதே நிலை...

புதுச்சேரியிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைச் சம்ங்கள் அதிகரித்து வருகிறது.

மாட்டிறைச்சி விவகாரம்...

மாட்டிறைச்சி விவகாரம்...

மாட்டிறைச்சி விவகாரத்தை பெரிதுப் படுத்தி நாட்டில் மதரீதியிலான பிளவை உருவாக்க பாஜக முயற்சி செய்கிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தரமற்ற ரேஷன் பொருட்கள்...

தரமற்ற ரேஷன் பொருட்கள்...

புதுச்சேரியில் அரசால் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் தரமற்றதாக உள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு அரசின் உதவிகள் கிடைக்கவில்லை.

வாழ்த்துக்கள்...

வாழ்த்துக்கள்...

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். வெற்றி பெற்றவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாராயணசாமி

நாராயணசாமி

மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பொறுப் பேற்ற பிறகு முதல் முறையாக நக்மா புதுச்சேரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பேட்டியின் போது முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமியும், புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயமும் உடனிருந்தார்.

English summary
All India Mahila congress general secretary Nagma today met reporters in Pudhucherry. She said that there is no safety for women through out the nation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X