சசிகலாவுக்கு சிறையில் எந்த சலுகையும் வழங்கப்படவில்லை... சத்தியம் செய்யும் தினகரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலாவுக்கு சிறையில் எந்த சலுகையும் வழங்கப்படவில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சிறையில் உள்ளவர்களை தேவையில்லாமல் வம்புக்கு இழுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளி சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் எந்த கட்டுப்பாடும் இன்றி ஃபிரி பர்டாக வலம் வருகிறார். அவர் சிறையிலிருந்து ஷாப்பிங் செல்வது உள்ளிட்ட படக்காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No special offers provide for sasikala in the jail : TTV Dinakaran

இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சசிகலாவை திஹார் சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றனர்.

இந்நிலையில் சசிகலாவின் அக்காள் மகனான டிடிவி தினகரன் சசிகலாவுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். சென்னை அடையாறு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் சிறை விதிமுறைகளை மீறி சசிகலாவுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். சசிகலா ஷாப்பிங் செய்துவிட்டு வருவது போன்ற புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Egmore Court Has Filed Charges Against TTV Dinakaran in FERA Case | Oneindia Tamil

சிறையில் உள்ளவர்களை தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கிறார்கள் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலா குறித்த சிறை வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் டிடிவி தினகரன் அதனை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran Says that no special offers provide for sasikala in the jail. He said unnessarily sasikala pulled for the issue.
Please Wait while comments are loading...