தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்தது... இயல்பை விட 62% குறைவு
வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்தது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இயல்பை விட 62% குறைவாக பருவமழை பெய்தது என இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை: ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3 மாத காலங்கள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யும் காலமாகும். தமிழக நீர் ஆதாரத்தின் முக்கியமான அம்சமாக வடகிழக்கு பருவமழை கவனிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அளவிற்கு அதிகமாக பெய்து கடும் வெள்ள சேதத்தை ஏற்படுத்தியது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.
இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 30ஆம்தேதி தொடங்கியது. தாமதமாக தொடங்கினாலும் போதுமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை அதிகம் வலுப்பெறாத காரணத்தால் மழைப்பொழிவு எதிர்பார்த்தபடி அமையவில்லை.

புயல்களால் மழையில்லை
நாடா புயலால் மழை வரும் என்று எதிர்பார்த்தும் மழை எதுவுமில்லை. வர்தா புயல் காரணமாக தமிழக கடல் பகுதியிலுள்ள ஈரப்பதமும், காற்றின் அழுத்தமும் காணாமல் போனது. குறிப்பாக புயல் தமிழகத்தில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

விவசாயம் பாதிப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு பொய்த்து விட்டதாக கருதப்படுகிறது. வழக்கமான அளவுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 38 சதவீத மழையே பதிவாகி உள்ளது. பருவமழை பொய்த்துவிட்டதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கை 100ஐ தொடப்போகிறது.

62%குறைந்து போன பருவமழை
இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவுக்கு வந்து விட்டதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்தபடி அமையவில்லை. மழை அளவும் குறைந்திருக்கிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயலபைவிட 62% குறைவாக பெய்தது என கூறினார்.

பொய்த்துப்போன பருவமழை
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 25 மாவட்டங்களில் இயல்பை விட 50%குறைவாக பெய்துள்ளது. கடலூர், நாமக்கல்லில் 80% வடகிழக்கு பருவமழை குறைவு
என்றும் பாலச்சந்திரன் கூறினார்.

142 ஆண்டுகளுக்குப்பின் குறைவு
1876ஆம் ஆண்டு பருவமழை 63% இயல்பை விட குறைவாக பெய்தது. 142 ஆண்டுகளுக்குப் பின்னர் 2016ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை 62% குறைவாக பெய்துள்ளது
என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

காற்றழுத்த தாழ்வு பகுதி
அந்தமான் கடல்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை ஒன்று உருவாகியுள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வுநிலை அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது . அடுத்த சில நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

ஏமாற்றிய பருவமழை
கடந்த ஆண்டைப் போல பருவமழை இந்த ஆண்டு அதிக அளவில் பெய்யக்கூடும், வெள்ள பாதிப்பு ஏற்படும் என்று அனைவரும் அஞ்சியிருந்த நிலையில் குடிநீருக்கு கூட தேவையான அளவிற்கு மழை பொழியாமல் ஏமாற்றி விட்டது என்பதுதான் உண்மை.
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications