சிவகங்கை அருகே போலீஸ் என்கவுண்டர்.. பிரபல ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டார்!
சிவகங்கை அருகே பிரபல ரவுடி கார்த்திகைச் செல்வன் என்பவரை போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். அவர் மீது 30 வழக்குகள் உள்ளனவாம்.
சிவகங்கை: சிவகங்கை அருகே பிரபல ரவுடி கார்த்திகைச் செல்வன் என்பவரை போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்ட கார்த்திகைச் செல்வன் மீது சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 22 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம் வயிரவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகைச் செல்வன். சிறு சிறு வேலை செய்து வந்த இவர் ரவுடியாகவும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வழிப்பறி, கொலை, கொள்ளை என பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இவர் மீது சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 22 கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் உள்ளதாகவும், மதுரை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் 8 வழக்குகள் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 30 வயதான கார்த்திகைச்செல்வன் பலமுறை கைது செய்யப்பட்டு சிறைக்குப் போனவர். அடிக்கடி கைதாகி வெளியே வரும் இவர் தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனது கூட்டாளிகள் சிலருடன் மதுரையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் கொள்ளையடித்துள்ளார் கார்த்திகைச் செல்வன் என்று கூறப்படுகிறது. இதையடுத்து கார்த்திகைச் செல்வன் உள்பட 6 பேரை போலீஸார் தேடி வந்தனர். தனிப்படை விசாரணையில் சிவகங்கை அருகே அவர்கள் பதுங்கியிருந்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு போலீஸார் அங்கு முற்றுகையிட்டனர்.

அப்போது கார்த்திகைச்செல்வன் வீச்சரிவாளால் தாக்கியதில் காவலர் வேல்முருகன் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. போலீஸார் குறைந்த அளவில் போனதால் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திரும்பி விட்டனராம். வேல்முருகனை மருத்துவமனையில் சேர்த்த பின்னர் கூடுதல் போலீஸாருடன் மீண்டும் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
புதுக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் நைனாங்குளம் பாலம் அருகே பதுங்கியிருந்த கார்த்திகைச் செல்வனை போலீஸார் பார்த்துப் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் மீண்டும் தாக்க முற்பட்டதால் போலீஸார் தற்காப்புக்காக சுட்டுள்ளனர். அதில் குண்டுக்காயம் பாய்ந்து கார்ததிகைசெல்வன் இறந்து போய் விட்டாராம்.

தற்போது கார்த்திகைச் செல்வனின் உடல் சிவகங்கை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.சிகிச்சை பெற்று வரும் போலீஸ்காரர் வேல்முருகன் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications