பாசிச ஆட்சியின் பச்சை துரோகம்-1000வது நாளில் பரந்தூர் போராட்டம்- திமுக அரசு மீது சீமான் கடும் தாக்கு
சென்னை: சென்னை அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான மக்களின் போராட்டம் 1,000வது நாளை எட்டியுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு உடனடியாக இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக சீமான் கூறியிருப்பதாவது: 4971 ஏக்கர் வளமான வேளாண் நிலங்களை அழித்து 1000க்கும் மேற்பட்டக் குடும்பங்களை இடம்பெயரச் செய்து, தலைமுறைத் தலைமுறையாக சமூகங்களை நிலைநிறுத்தி வந்த வாழ்வாதாரங்களை சிதைத்து, ஆயிரக்கணக்கான ஏக்கர் ஈரநிலங்களை சீரழித்துத் திமுக - பாஜக அரசுகளால் "முன்னேற்றம்" என்ற பெயரில் திணிக்கப்படும், இத்திட்டத்தினைத் தொடர்ச்சியாக எதிர்த்து 1000ஆவது நாளினை எட்டியுள்ள பரந்தூர் ஏகனாபுரம் பொதுமக்களின் உறுதியான போராட்ட உணர்வானது தமிழர் வரலாற்றில் இடம்பெறும் புரட்சிகர எடுத்துக்காட்டாகும்.

கண்டுகொள்ளாத திமுக அரசு
அதே நேரத்தில் 1000 நாட்கள் கடந்தும் மக்கள் போராடி வரும் நிலையில் ஒருமுறை கூட அவர்களை நேரில் சென்று சந்திக்காத ஆட்சியாளர்களின் செயல்பாடு, மக்களைப் பற்றித் துளியும் அக்கறை கொள்ளாத வெறுக்கத்தக்க ஆட்சியின் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அனைத்துவித சூழலியல் அழிவுத் திட்டங்களையும் எதிர்ப்பது போல மக்களை ஏமாற்றி, எட்டுவழிச் சாலை போன்ற திட்டங்களை எதிர்த்துப் பொதுமக்கள் போராடிக் கண்ட வெற்றியின் பலன்களைத் தன்வசப்படுத்தி, ஆட்சி அதிகாரத்தை அடைந்த திமுக அரசானது அதற்கு ஈடான அழிவுத் திட்டங்களைத் தாமே முன்னெடுத்து மக்களின் குரல்களை நசுக்கி வாழ்வாதாரங்களை சிதைத்து, செயல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது மக்களுக்கு இழைக்கும் பச்சைத் துரோகமாகும்.
அடக்குமுறையை ஏவுவதா?
இத்திட்டத்தை அமைக்கும் நிலைப்பாடெல்லாம் ஒருபுறம் இருக்க, தொடர்ச்சியாகப் போராடி வரும் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றைக் கருத்தில் கொண்டாவது செயல்பட வேண்டும் என்கின்ற அடிப்படை மக்களாட்சி மாண்பைக் கூடக் கடைப்பிடிக்காமல், போராடிவரும் பொதுமக்களின் மீது அதிகாரப் போக்கினைக் கட்டவிழ்த்துக் காவல்துறையின் அடக்குமுறையை ஏவி, பாஜக அரசுக்கு எவ்விதத்திலும் சளைக்காத எதேச்சதிகாரப் போக்கினைத் திமுக அரசு முழுமையாகக் கையில் எடுத்துள்ளது. பாஜக அரசினைப் பார்த்துத் திமுக வைக்கக்கூடிய அத்தனை பாசிச முழக்கங்களும் திமுக அரசுக்கும் பொருந்தும் என்பதை சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளேன்.
பாசிச ஆட்சியாளர்களுக்கு முடிவுரை
இவ்வளவு இன்னல்கள் நிறைந்த சூழ்நிலையிலும், ஏகனாபுரம் - பரந்தூர், சுற்றுவட்டாரக் கிராம்ப் பொதுமக்கள் மற்றும் போராட்டக் குழுவினரின் சூழலியல் நலன் குறித்தப் புரிதலும், பூர்வகுடி நிலங்களைப் பாதுகாக்கப் போராடும் திடமான புரட்சிகர உணர்வும், நம்மை நெகிழச்செய்கிறது. பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதை எதிர்த்துவரும் பொதுமக்களின் தொடர் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, இதுநாள் வரை பொதுமக்களுக்குத் துணையாகப் போராட்டத்தில் பங்கெடுத்த நாம் தமிழர் கட்சி, தொடர்ந்து இறுதிவரை மக்கள் போராட்டத்திற்கான ஆதரவினை அனைத்துத் தளங்களிலும் அளித்து, துணைநின்று போராடும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். மக்களின் இந்தப் போராட்ட உணர்வே பாசிச ஆட்சியாளர்களுக்கு முடிவுரை எழுதட்டும். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

பூவுலகின் நண்பர்கள்
இதேபோல பூவுலகிண் நண்பர்கள் எனும் சுற்றுச் சூழல் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், திராவிட மாடல்" கோட்பாடு வலியுறுத்தும் பரந்துபட்ட வளர்ச்சியை உறுதிபடுத்துவதற்காக நடைபெறும் போராட்டம்தான் "பரந்தூர் விமான நிலையத்திற்கு" எதிரான போராட்டம்.
அந்த போராட்டம் அம்மக்களுடைய வாழ்வாதாரத்தை காப்பதற்காக மட்டுமல்ல, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை, காலநிலை மாற்றத்தின் தீவர விழைவுகளில் இருந்து காப்பதற்காவும் நடைபெறுகிறது. இந்த போராட்டம் இன்றோடு 1000 நாட்களை எட்டியுள்ளது. அம் மக்களின் உறுதியில் துளி கூட குறையவில்லை, அதே உயிர்ப்போடு போராடிவருகிறார்கள். இந்த போராட்டம் வெற்றி பெறுவது முக்கியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications