ஜெ.,வுக்கு எதிராக செயல்பட்டவர் ஓபிஎஸ்.. தினகரன் சரமாரி குற்றச்சாட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி-வீடியோ

  சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்பட்டவர் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

  அதிமுக ராஜ்யசபா எம்பி சசிகலாபுஷ்பா ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரனை இன்று அவரது வீட்டில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் தினகரனுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் அவர் கூறினார்.

  O.Paneerselvam acted against Jayalalitha: TTV Dinakaran

  இதைத்தொடர்ந்து சென்னை பெசன்ட்நகரில் உள்ள தனது வீட்டில் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆர்கே நகர் தேர்தல் முடிவு அதிமுகவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என அவர் கூறினார்.

  ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன் தரவில்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார். ஓட்டுக்கு 6000 ரூபாய் கொடுத்தது எடப்பாடி பழனிச்சாமி அணிதான் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

  உண்மையான தொண்டர்கள் தன்பக்கம் உள்ளனர் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார். ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்பட்டவர்தான் ஓ.பன்னீர்செல்வம் என்றும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TTV Dinakaran said O.Paneerselvam acted against Jayalalitha. He said no money given for voters. Edappadi palanisami team only gave money to voters he said.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற