பட்ஜெட்: உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ11,514.34 கோடி நிதி- ஓபிஎஸ்
சென்னை: சட்டசபையில் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ11,514.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:
-கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்வதற்கான நிதி உதவித் திட்டம் தொடரும்
-ஏழைப் பெண்கள் திருமண நிதி உதவி திட்டத்துக்கு ரூ703.16 கோடி நிதி ஒதுக்கீடு
-சத்துணவுத் திட்டத்துக்கு ரூ1644 கோடி நிதி ஒதுக்கீடு

-அரசு அலுவலர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ300 கோடி ஒதுக்கீடு
-ஆதி திராவிடர் பழங்குடியினர் தொழில் தொடங்க ரூ130 கோடி நிதி ஒதுக்கீடு
-முதியோர் உதவித் தொகை திட்டத்துக்கு ரூ3,820 கோடி ஒதுக்கீடு
-முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கான உதவித் தொகை திட்டத்துக்கு ரூ582.58 கோடி
-பள்ளி மாணவர்களுக்கான இலவச திட்டங்களுக்கு ரூ2,705 கோடி நிதி ஒதுக்கீடு
-கல்வி உரிமை சட்டப்படி அனைவருக்கும் கட்டாய கல்வி வழங்க ரூ125.70 கோடி ஒதுக்கீடு
-பள்ளி கட்டிடங்களை மேம்படுத்த ரூ330.60 கோடி ஒதுக்கீடு
-முத்துலெட்சுமி மகப்பேறு மருத்துவ திட்டத்துக்கு ரூ668 கோடி நிதி ஒதுக்கீடு
-உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நாட்டிலேயே முதல் மாநில விருதை தமிழகம் பெற்றுள்ளது
-10 மருத்துவ கல்லூரி மருத்துவமனை, 7 மாவட்ட தலைமை மருத்துவமனை உலகத் தரத்தில் மேம்படுத்தப்படும்
-சுகாதாரத்துறைக்கு ரூ9,073 கோடி நிதி ஒதுக்கீடு
-வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் இடையேயான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி
-உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 50% ஆக அதிகரிப்பு
-உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ11,514.34 கோடி நிதி கிடைக்கும்
-18 கூட்டு குடிநீர் திட்டங்களை செயல்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன
-வீட்டு வசதித் துறைக்கு ரூ689 கோடி ஒதுக்கீடு
-தூய்மை தமிழகம் திட்டத்துக்கு ரூ100 கோடி ஒதுக்கீடு
-நகராட்சி நிர்வாகத்துக்கு ரூ11,820 கோடி ஒதுக்கீடு
-தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 7.66 லட்சம் வீட்டு கழிவறைகள்
-20,000 பசுமை வீடுகள் கட்டப்படும்
-இலவச வேட்டி, சேலைக்கு ரூ487.45 கோடி ஒதுக்கீடு
-எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டுக்கு ரூ470 கோடி நிதி ஒதுக்கீடு
-நடப்பாண்டில் 12,000 கறவை மாடுகள் வழங்கப்படும்
-ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ21,186 கோடி நிதி ஒதுக்கீடு
-வெள்ளம் பாதித்த பகுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ரூ30 கோடி ஒதுக்கீடு
-முதலீட்டாளர் மாநாடு மூலம் ரூ23,500 கோடி முதலீடு வந்துள்ளன
-தொழில்துறை வளர்ச்சிக்கு ரூ2,104.49 கோடி ஒதுக்கீடு
-ஃபோர்டு நிறுவனம் தமிழகத்தில் வாகன ஆராய்ச்சி மையத்தை தொடங்குகிறது
-இலவச லேப்டாப், சீருடைகள், பாடநூல்கள் வழங்க ரூ2,705 கோடி ஒதுக்கீடு
-தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ32.94 கோடி ஒதுக்கீடு
-500 கிராம கோவில்கள் சீரமைக்கப்படும்
-2.49 லட்சம் மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது
-அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 18,500 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும்
-100 யூனிட் இலவச மின்சாரத்தால் 1.90 கோடி பேர் பயனடைகின்றனர்
-தமிழக பட்ஜெட்டில் புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை
-மின்சார தேவை மற்றும் உற்பத்தி இடையே இடைவெளி சரி செய்யப்பட்டுவிட்டது
-5 ஆண்டுகளில் 8432.50 மெகாவாட் கூடுதல் மின்சாரம் பெறப்பட்டுள்ளது
-இணையம் வழியே ரேசன் கார்டு முகவரி மாற்றத்துக்கு ஏற்பாடு
-அடுத்த 5 ஆண்டுகளில் 13,000 மெகாவாட் அனல்மின்சாரம், 2500 மெகாவாட் புனல் மின்சாரம் உற்பத்தி
-சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ1230 கோடி ஒதுக்கீடு
-நெல்லை- கொல்லம், ஒட்டன்சத்திரம்- திருப்பூர் சாலைகள் 4 வழி சாலையாகிறது
-ரூ1541 கோடி செலவில் 4 வழிச் சாலைகளாக மாநில நெடுஞ்சாலைகள் விரிவாக்கம்
-ரூ6 ஆயிரம் கோடிக்கு புதிய பயிர்க் கடன்கள் வழங்கப்படும்
-தேசிய நதிகளை இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்
-நீர்வளங்கள் ஆதார துறைக்கு ரூ3402 கோடி ஒதுக்கீடு
-தொழில்துறைக்கு ரூ2104.99 கோடி நிதி ஒதுக்கீடு
-மேலும் 30 கோயில்களில் அன்னதான திட்டம்
-வனவிலங்குகளால் ஏற்படும் இழப்புகளுக்கான நிதி உதவித் தொகை அதிகரிப்பு
-வனத்துறை மற்றும் சுற்றுச் சூழல் துறைக்கு ரூ 652.78 கோடி ஒதுக்கீடு
-சென்னை, சுற்றுப்புற ஏரிகளை சீரமைக்க படிப்படியாக நடவடிக்கை
-மீன்வளத்துறைக்கு ரூ 743..73 கோடி ஒதுக்கீடு
-கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ1188.17 கோடி ஒதுக்கீடு
-ஊரக வளர்ச்சிதுறைக்கு ரூ21,186 கோடி ஒதுக்கீடு
-2வது மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும்
-கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ1188.17 கோடி ஒதுக்கீடு
-ஊரக வளர்ச்சிதுறைக்கு ரூ21,186 கோடி ஒதுக்கீடு
-2வது மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும்
-கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ1188.17 கோடி ஒதுக்கீடு
-பால் பொருட்களைத் தயாரிக்கும் மையம் மதுரையில் அமைக்கப்படும்
-பள்ளி கல்வித்துறைக்கு ரூ24,130 கோடி நிதி ஒதுக்கீடு
-சுகாதார துறைக்கு ரூ9073 கோடி ஒதுக்கீடு












Click it and Unblock the Notifications