For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலவச ஆடு, மாடு வழங்க ரூ182 கோடி ஒதுக்கீடு

By Mathi
Google Oneindia Tamil News

-கறவை மாடு வாங்க நிதி ரூ30,000-ல் இருந்து ரூ35,000 ஆக உயர்வு

-1 லட்சம் குடும்பங்களுக்கு 4 லட்சம் வெள்ளாடு, செம்மறியாடுகள் வழங்கப்படும்

-இலவச ஆடு, மாடு வழங்க ரூ182 கோடி ஒதுக்கீடு

-தாழ்த்தப்பட்ட பழங்குடி மாணவர்கள் கல்வி உதவி தொகைக்கு ரூ 1429.94 கோடி

O Panneerselvam presents TN Budget

-கடலூர் மாவட்டத்தில் ரூ140 கோடி செலவில் ஆற்றங்கரைகள் மேம்படுத்தப்படும்

-பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ரூ 208 கோடி ஒதுக்கீடு

-பண்ணை இயந்திரங்கள் வாங்க விவசாயிகளுக்கு 50% மானியம் வழங்கப்படும்

-முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு ரூ 928 கோடி ஒதுக்கீடு

-தோட்டகலைத்துறைக்கு ரூ511 கோடி ஒதுக்கீடு

-பண்ணை இயந்திரமயமாக்கல் திட்டத்துக்கு ரூ100 கோடி ஒதுக்கீடு

-உதவித் திட்டங்கள், மானியங்களுக்கு ரூ68,211 கோடி ஒதுக்கீடு

-உள்ளாட்சித் தேர்தலை நடத்த ரூ183.24 கோடி ஒதுக்கீடு

-உணவு தானிய உற்பத்தி இலக்கு ரூ147 லட்சம் மெட்ரிக் டன்

O Panneerselvam presents TN Budget

-உழவர் பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ206 கோடி ஒதுக்கீடு

-வருவாய்த்துறைக்கு ரூ5600 கோடி ஒதுக்கீடு

-அடுக்குமாடி வீடுகள் கட்டித்தர கூட்டுப் பட்டாக்கள் வழங்கும் திட்டம்

-போக்குவரத்து துறைக்கு ரூ1295.08 கோடி நிதி ஒதுக்கீடு

-2,000 புதிய அரசு பேருந்துகள் வாங்க ரூ125 கோடி ஒதுக்கீடு

-மின்சாரத்துறைக்கு மானியமாக ரூ13,856 கோடி ஒதுக்கீடு

-லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்படும்

-தமிழக அரசின் கடன் ரூ2.52 லட்சம் கோடி

-திருத்திய பட்ஜெட் மதிப்பீடு 1,48,175.09 கோடி

-அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை

-சிறைச்சாலை துறைக்கு ரூ282.92 கோடி ஒதுக்கீடு

-தீயணைப்புதுறைக்கு ரூ230.7 கோடி ஒதுக்கீடு

-7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த உயர்நிலைக் குழு அமைக்கப்படும்

-சமூகல நலத்துறைக்கு ரூ4512.32 கோடி ஒதுக்கீடு

-100 யூனிட் இலவச மின்சாரத்தால் அரசுக்கு ரூ1607 கோடி இழப்பு

-நாட்டிலேயே முதல் முறையாக கடற்கரை ஊர்க்காவல் படைக்கு 500 மீனவர் இளைஞர்கள் சேர்ப்பு

-தமிழகத்தில் இடதுசாரி தீவிரவாத சக்திகள் ஒடுக்கப்பட்டுள்ளன

-உலமாக்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ1,000-ல் இருந்து ரூ1,500 ஆக உயர்வு

-தமிழ் வளர்ச்சி துறைக்கு ரூ32.4 கோடி ஒதுக்கீடு

-தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்துக்கு ரூ703.16 கோடி

-மாற்றுத் திறனாளிகளுக்கு 1000 பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்

-இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு ரூ105.97 கோடி ஒதுக்கீடு

-மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ396.74 கோடி ஒதுக்கீடு

O Panneerselvam presents TN Budget

-தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 8.79% ஆக இருக்கக் கூடும் என கணிப்பு

-தமிழகத்தின் நிதி பற்றாக்குறை ரூ40,533.84 கோடி

-அடுத்த ஓராண்டில் 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

-தொழில் கட்டமைப்பு நிதியத்துக்கு ரூ2,000 கோடி ஒதுக்கீடு

-மின்சார மானியத்துக்கு ரூ9,007 கோடி ஒதுக்கீடு

-திறன்மேம்பாட்டு இயக்கத்துக்கு ரூ150 கோடி ஒதுக்கீடு

-500 டாஸ்மாக் கடைகளை மூடியதால் ரூ6,636.08 கோடி இழப்பு

-மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி ரூ4 ஆயிரத்தில் இருந்து ரூ5,000 ஆக உயர்வு

-நகர்ப்புற வாழ்வாதார திட்டத்துக்கு ரூ350 கோடி ஒதுக்கீடு

-வறுமை ஒழிப்பு திட்டத்துக்கு ரூ355.81 கோடி ஒதுக்கீடு

-ரூ422 கோடியில் போலீசாருக்கு 2673 வீடுகள் கட்டித் தரப்படும்

-ரூ52.64 கோடியில் ஆற்றங்கரை ஓரங்களில் மரம் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படும்

-அடுத்த ஓராண்டில் 3.50 லட்சம் இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்படும்

-ரூ24.58 கோடியில் வைகை, நொய்யல் ஆறுகள் தூர்வாரப்படும்

-சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ300 கோடி ஒதுக்கப்படும்

-தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ15,854.47 கோடி

-அடுத்த ஓராண்டில் ரூ420 கோடியில் சூரிய ஒளி மின்வசதி கொண்ட 20,000 வீடுகள் கட்டப்படும்

-அடுத்த ஆண்டில் 5.35 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும்

-5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டப்படும்

-பட்ஜெட் உரையின் முதல் 5 நிமிடங்கள் ஜெ.வுக்கு புகழாரம் சூட்டி பேசினார் ஓபிஎஸ்

-புரட்சிகளின் பிம்பமே, பத்தரைமாற்று தங்கமே, முழுமதி, வீரத் திருமகளே என ஜெ.வுக்கு புகழாரம்

-வழக்கம்போல ஜெ.வுக்கு புகழாரம் சூட்டி பட்ஜெட் உரையை தொடங்கினார் ஓபிஎஸ்

-மாசறு இதயம், மனித தெய்வம், புடம் போட்ட தங்கம் என ஜெ.வுக்கு ஓபிஎஸ் பாராட்டு

-சட்டசபையில் திருத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் ஓ பன்னீர்செல்வம்

-சட்டசபையில் 2016-17-ம் ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட் தாக்கல்

--தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது

English summary
Finance Minister O Panneerselvam today Presented 2016- 2017 Budget.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X