ராம்நாத் கோவிந்துக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்.. வாக்களித்த பின் ஓபன்னீர்செல்வம் பேட்டி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்று ஜனாதிபதியாவது உறுதி என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 14வது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தமிழக சட்டசபையில் தொடங்கிய வாக்குப்பதிவில் முதல் வாக்கை முதல்வர் பழனிசாமி பதிவு செய்தார்.

 O.Pannerselvam says that Ramnath kovind definetly will become President

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், சபாநாயகர் தனபால் உள்ளிட்டோரும் வாக்களித்துள்ளனர். அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் பொருளாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தங்கள் அணி ஆதரவு எம்எல்ஏக்களுடன் தலைமைச் செயலகம் வந்தார்.

 O.Pannerselvam says that Ramnath kovind definetly will become President
Presidential Election 2017, Ramnath kovind Biography-Oneindia Tamil

வாக்குப்பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தின் வெற்றி வாய்ப்பு உறுதியாகியுள்ளதாகக் கூறினார். ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்று குடியரசுத் தலைவராவது உறுதி என்றும் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ADMK rivalry faction O.Pannerselvam cast his vote in Chennai and said that BJP candidate Ramnath Kovind will win easily in the President election.
Please Wait while comments are loading...