பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? 'ஒன்இந்தியாதமிழ்' வாசகர்கள் சொல்வது இதுதான்
ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளராக களமிறங்க அத்வானிக்கே அதிக வாய்ப்புள்ளதாக ஒன்இந்தியா தமிழின் அதிக வாசகர்கள் வாக்களித்துள்ளனர்
சென்னை: குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் 5 ஆண்டுகள் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட போவது யார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே அரசியல்வாதிகளிடமும் நாட்டு மக்களிடமும் ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதியை பாராளுமன்ற இரு அவை எம்.பி.க்கள் மற்றும் மாநில சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்து எடுப்பார்கள். எம்.பி.க்கள் மொத்தம் 776 பேர் உள்ளனர். நாடெங்கும் 4120 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரின் ஓட்டுக்கும் ஒரு மதிப்பு உண்டு.
அதன்படி ஒரு எம்.பி.யின் வாக்கு மதிப்பு தலா 708 ஆகும். எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு அந்தந்த மாநில மக்கள் தொகை மற்றும் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையை வைத்து கணக்கிடப்படும். ஒட்டு மொத்தமாக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 882 ஆகும். இதில் பாதிக்கு மேல் பெறுபவர்தான் ஜனாதிபதியாக முடியும். ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகள் இன்னும் ஓரிரு வாரங்களில் சூடு பிடிக்கத் தொடங்கி விடும்.

வாக்கெடுப்பு
இந்நிலையில் பாஜக, சார்பில் யாரை ஜனாதிபபதி வேட்பாளராக களமிறக்க வாய்ப்புள்ளது என்பது குறித்த தகவல்கள் அடிப்படையில் 'ஒன்இந்தியா தமிழ்' இணையதளம் ஆன்லைனில் ஒரு வாக்கெடுப்பு நடத்தியது. ஜனாதிபதி பதவிக்கு பாஜக யாரை நிறுத்தும்? என்பதே கேள்வி.

போட்டியாளர்கள்
பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக உள்ள தகவல் அடிப்படையில் இந்த பெயர்கள் ஆப்ஷன்களாக கொடுக்கப்பட்டன.

அத்வானிக்கு அதிக வாய்ப்பு
இதில் அத்வானிக்கே வாய்ப்புள்ளதாக அதிக வாசகர்கள் வாக்களித்துள்ளனர். 52.09 சதவீதம் பேர் அத்வானிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அத்வானியின் பெயர் வெகுகாலமாக இப்பதவிக்கான போட்டியில் இருப்பதாக ஊடங்களில் செய்தி வெளியாகி வரும் நிலையில், வாசகர்கள் எதிர்பார்ப்பும் அதுவேயாக உள்ளது என்பது தெரிகிறது.

மோகன் பகவத்
சுஷ்மா சுவராஜுக்கு இதில் 2வது இடம் கிடைத்துள்ளது. 19.71 சதவீதம் பேர் அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஆச்சரியம் என்னவென்றால், மோகன் பகவத்துக்கு 3வது இடம். அவருக்கு 13.7 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.

சுமித்ராவுக்கும் வாய்ப்பு
முரளி மனோகர் ஜோஷி மற்றும் சுமித்ரா மகாஜன் நடுவே பெரிய வித்தியாசம் இல்லை. முரளி மனோகர் ஜோஷி ஜனாதிபதியாக வாய்ப்புள்ளதாக 7.9 சதவதீம் பேரும், சுமித்ரா மகாஜன் ஜனாதிபதியாவார் என 6.6 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications