சட்டம் ஒழுங்கு கெட்டு போச்சா? ஜமுக்காளத்தில் வடிகட்டின பொய்... பொன்னாருக்கு ஓபிஎஸ் பொளேர் பதில்

Subscribe to Oneindia Tamil
  பொன்னாருக்கு ஓபிஎஸ் பொளேர் பதில் | Oneindia Tamil

  சென்னை : தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறி இருக்கும் கருத்து ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யாக உள்ளது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சாடியுள்ளார்.

  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்த ஆலோசனைக்கூட்டம் இன்று ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம் முடிந்த பின் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

   OPS about DMK Leader Stalin Proposal on Transport Department

  மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் சட்டஒழுங்கு சரி இல்லை என்று கூறி இருப்பது குறித்து கருத்து தெரிவித்த ஓ.பி.எஸ், அமைச்சரின் கருத்து ஏற்புடையது அல்ல. அவர் தெரிவித்து இருப்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யாக உள்ளது. இந்தியாவிலேயே சட்ட ஒழுங்கு தமிழகத்தில் தான் மிகச்சரியாக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

  அம்மா உணவகம் நஷ்டத்தில் இயங்குவது குறித்த கேள்விக்கு, அம்மா உணவகம் லாப நோக்கில் நடத்தப்படுவது அல்ல. ஏழை எளிய மக்களின் பசியைப் போக்கிட ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட ஒரு திட்டம். அது தொடர்ந்து செயல்படும் என்று ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டார்.

  போக்குவரத்துத்துறையில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்பு குறித்து ஸ்டாலின் கொடுத்துள்ள பரிந்துரைகள் குறித்த கேள்விக்கு, 2006 - 2011 ஆட்சியில் இருந்த போது வராத ஞானோதயம் ஸ்டாலினுக்கு தற்போது வந்திருப்பது தனக்கு ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  OPS comment about DMK Leader Stalin Proposal on Transport Department. Earlier a meeting held on ADMK headquarters about Jayalalithaa Birthday Celebrations which is led by OPS and EPS.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற