ஆறுக்குட்டி விலகியதால் அவசர ஆலோசனை.. பாதியிலேயே வெளியேறிய ஓ.பி.எஸ்சால் பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கருத்து வேறுபாடு காரணமாக ஓபிஎஸ் அணியில் இருந்து ஆறுக்குட்டி விலகியதை தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் இருந்து ஓபிஎஸ் திடீரென வெளியேறி காரில் புறப்பட்டு எங்கோ சென்றார்.

அதிமுகவில் இருந்து பிரிந்து தனி அணியாக செயல்பட தொடங்கியபோது ஓபிஎஸ்ஸுக்கு முதல் ஆளாக போய் ஆதரவு தெரிவித்தவர் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுக்குட்டி ஆவார்.

OPS discussing with his team

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓபிஎஸ் அணி சார்பில் கொண்டாடப்பட்ட எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தமக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும் அந்த அணியில் தான் ஓரங்கட்டப்படுவதாகவும் வெளிப்படையாக ஆறுக்குட்டி புகார் தெரிவித்தார்.

அவர் அணிமாறுவதாகவும் தெரிவித்திருந்த நிலையில் சேலம் எடப்பாடியில் உள்ள முதல்வர் பழனிச்சாமி இன்று சந்தித்து அவரது அணியில் இணைந்து கொண்டார். இதைத் தொடர்ந்து அணியின் நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் செய்தித் தொடர்பாளர் சுவாமி நாதன் கூறுகையில், கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் ஆறுக்குட்டியிடம் விசாரணை நடைபெற்றது. என்ன நிர்பந்தமோ தெரியவில்லை. அவர் தனிப்பட்ட காரணங்களுக்காகவே அணி மாறிவிட்டார் என்றார் சுவாமிநாதன்.

கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் ஓ.பி.எஸ் தலைமையில் அவர் ஆதரவு எம்.பி., எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே ஓ.பன்னீர் செல்வம் திடீரென வெளியேறி காரில் புறப்பட்டு எங்கோ சென்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
O.Panneer selvam going to discuss with his members after Aarukutty MLA joins in Edappadi team.
Please Wait while comments are loading...