சசிகலாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்காதீர்கள்.. ஓ.பி.எஸ். வைத்த 4 கோரிக்கைகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா தேர்வு சட்டவிரோதமானது, அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவிடம் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.

OPS puts few demands to Governor

ஆளுநர் வித்யாசாகர ராவை இன்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ராஜ்பவனில் சென்று சந்தித்தார். அப்போது அவரிடம் சில கோரிக்கைகளை வைத்து விட்டு வந்துள்ளார்.

அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகளாக கூறப்படுவது:

  • என்னைக் கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கி விட்டனர்.
  • சசிகலாவை முதல்வராக தேர்வு செய்தது சட்டவிரோதம்.
  • சசிகலாவுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கூடாது.
  • ஆளுநர் மாளிகையில் எம்.எல்.ஏக்கள் அணிவகுப்பை நடத்தக் கூடாது.
  • சட்டசபையில் மட்டுமே பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க அனுமதிக்க வேண்டும்.
  • அதிமுக சட்டசபை உறுப்பினர்களை சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளனர்.

இவ்வாறு முதல்வர் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sourcdes say that CM O Panneerselvam has putforth few demands to Governor when hem met the later today.
Please Wait while comments are loading...