ஆர்கே.நகரில் சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கினார் மதுசூதனன்.. வீடுவீடாக சென்று நிர்வாகிகளுடன் சந்திப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்கே.நகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு அதிமுகவைச் சேர்ந்த வேட்பாளர் மதுசூதனன் இன்று தனது சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். முக்கிய நிர்வாகிகளை வீடு வீடாக சென்று அவர் சந்தித்து வருகிறார்.

சசிகலாவின் அதிகார வெறியால் அதிமுக இரண்டாக சசிகலா தரப்பு அதிமுக ஓபிஎஸ் தரப்பு அதிமுக என இரண்டாக உடைந்தது. இதனால் ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் பலரையும் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்னதாக சசிகலா நீக்கினார்.

ஜெயலலிதா மரணத்துக்கு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர்தான் காரணம் என மக்கள் மத்தியில் பேச்சு நிலவும் நிலையில், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய ஓபிஎஸ்க்கு எதிரான நடவடிக்கைகளை சசிகலா எடுத்தது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்கே.நகர் இடைத்தேர்தலே சசிகலாவு தரப்புக்கும் ஓபிஎஸ் தரப்புக்கும் மக்கள் மத்தியில் உள்ள மரியாதை தெரியவரும்.

ஓபிஎஸ் அணிக்கு வருவார்கள்

ஓபிஎஸ் அணிக்கு வருவார்கள்

இந்தத் தேர்தலில் எப்பாடு பட்டவது வெற்றி பெற வேண்டும் என சசிகலா தரப்பு சார்பில் டிடிவி.தினகரனே களம் இறங்குகிறார். இந்த தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வெற்றி பெற்றால் சசிகலா கூடாரத்தில் உள்ள பல எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு வருவார்கள் என கூறப்படுகிறது.

மதுசூதனன் வேட்பாளராக அறிவிப்பு

மதுசூதனன் வேட்பாளராக அறிவிப்பு

இதனால் கட்சியை சசிகலா குடும்பத்திடம் இருந்து காப்பாற்றியாக வேண்டும் என தீவிரமாக உள்ள ஓபிஎஸ் தரப்பு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மதுசூதனனை நேற்று வேட்பாளராக அறிவித்தது.

தொகுதிக்கு பரீட்சயமானவர்

தொகுதிக்கு பரீட்சயமானவர்

50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்கே நகர் தொகுதியில் வசித்து வரும் மதுசூதனன் இந்த தொகுதிக்கு நன்கு பரீட்சயமானவர். ஏற்கனவே இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்று பெற்றவர்.

அனைவருக்கும் தெரிந்தவர்

அனைவருக்கும் தெரிந்தவர்

அந்த அடிப்படையில் இவரை நிறுத்தினால் தங்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று கருதி ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கருதியுள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியிலேயே மதுசூதனன் வசித்து வருவதால் அ.தி.மு.க.வில் உள்ள அனைத்து தொண்டர்களும், நிர்வாகிகளும் அவருக்கு நன்றாக தெரியும்.

களத்தில் இறங்கியுள்ளனர்

களத்தில் இறங்கியுள்ளனர்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பிளவுபட்டு இருப்பதால் முதலில் முக்கிய நிர்வாகிகளை சந்திக்க அவர் திட்டமிட்டு இன்று முதல் களத்தில் இறங்கியுள்ளனர். முக்கிய நிர்வாகிகளை வீடு வீடாக சென்று சந்தித்து வரும் மதுசூதனன் சசிகலா குடும்பத்தினரிடம் இருந்து கட்சியையும் தமிழகத்தையும் கைப்பற்ற இணைந்து செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
OPS team ADMK candidate Madhusoodhanan has started his election campaign today. He is meeting the party leaders in the RK.Nagar constituency.
Please Wait while comments are loading...