For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ப.சிதம்பரம் குடும்பம் 30ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்.. எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் நிதியமைச்சர் ப, சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், ப.சிதம்பரம் குடும்பம் 30ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளத

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் நிதியமைச்சர் ப, சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், ப.சிதம்பரம் குடும்பம் 30ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்த போது முறைகேடாக சொத்து சேர்த்ததாக புகார் உள்ளது. அவர் மற்றும் அவரது மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மகள் ஸ்ரீநிதி ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

P Chidambaram Property Accumulation Case: Chennai HC will give its final verdict today

சுவிஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் சொத்து வாங்கியதாகவும், சரியாக வரி காட்டாமல் வருமான வரித்துறையை ஏமாற்றியதாகவும் சென்னைஉயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து கடந்த சில வாரங்களாக விசாரணையும் நடந்தது.

சிதம்பரத்தின் மனைவி, மகன், மகள் ஆகியோர் இதற்காக கோர்ட்டில் நேரில் கூட ஆஜராகினர், இவர்கள் மீது கருப்பு பணம் தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கப்பட்டு இருந்தது, இதனால் விசாரணையும் கண்டிப்புடன் நடந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் தற்போது விசாரணை முடிந்து இருக்கிறது.

தற்போது இவ்வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப, சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் 30ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

English summary
P Chidambaram Property Accumulation Case: Chennai High Court will give its final verdict today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X