எனக்கு மட்டுமின்றி என் அம்மாவுக்கும் பின்னணி பாடியவர் சுசீலா: ஜெ. பெருமிதம்
சென்னை: திரைப்படங்களில் தனக்கு மட்டுமின்றி தனது தாயாருக்கும் பின்னணி பாடல்களைப் பாடியவர் பி. சுசீலா என முதல்வர் ஜெயலலிதா பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
கின்னஸ் சாதனை படைத்துள்ள பிரபல பின்னணி பாடகி பி. சுசீலாவை பாராட்டி முதல்வர் ஜெயலலிதா அவருக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,

தாங்கள் மிக அதிகமான பாடல்களைப் பாடியதற்கென கின்னஸ் சாதனை படைத்துள்ளீர்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இந்த சாதனைக்கு எனது பாராட்டுதல்களை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.
தாங்கள் சிறிய வயதிலிருந்தே இசை மீது மிகுந்த ஆர்வம் கொண்டு, தங்களது கடின உழைப்பால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ளீர்கள்.
திரைப்படங்களில் எனக்கு மட்டுமின்றி எனது தாயாருக்கும் தாங்கள் பின்னணி பாடல்களைப் பாடியுள்ளீர்கள் என்பதை இந்த நேரத்தில் பெருமையுடன் நான் நினைவு கூருகிறேன். பல திரைப்படங்கள் தங்களின் இனிய குரல் வளத்தினாலேயே பெருமை அடைந்தன என்றால் அது மிகையில்லை.
17,695 திரைப்பட பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனையாளராக புகழ் பெற்றுள்ள தாங்கள் இன்னும் பல ஆயிரம் பாடல்களைப் பாடி தமிழ் இசைக்கும், இசைத் துறைக்கும் சேவையாற்ற வேண்டுமென நான் இறைவனை வேண்டுகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications