மாட்டுக் கொம்பில் பெயிண்ட் கூட அடிக்கக் கூடாதாம்... அடுத்து மாட்டு பொங்கலுக்கும் தடை?!
மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசில் சிறைவாசம் என அறிவித்திருப்பதன் மூலம் தமிழர்களின் பண்பாட்டு திருவிழாவான மாட்டு பொங்கல் கொண்டாட முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை: மாடுகளின் கொம்புகளுக்கும் பெயிண்ட் அடித்தால் இனி சிறைவாசம் என சொல்கிறது மத்திய அரசு. இந்த புதிய தடையால் தமிழர்களின் பண்பாட்டு விழாவான மாட்டு பொங்கல் இனி கொண்டாட முடியாத நிலை உருவாகிடும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு திடீரென மாடுகள் மீது கரிசனம் காட்டுகிறது. மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை விதித்ததுடன் ஆடு, மாடு பலியிடலுக்கும் தடை விதித்துள்ளது. அத்துடன் மாடுகளின் கொம்புகளுக்கு பெயிண்ட் அடித்தாலும் கூட சிறைவாசம்தானாம்.
தமிழர்களின் பண்பாட்டு விழா பொங்கல் பண்டிகைகள்தான். காப்பு கட்டு, பொங்கல் திருநாள், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் இவைதான் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்கள்.

உறவுகள் ஒன்று கூடும்
இந்த பொங்கல் திருவிழாவின் போதுதான் ஊரே ஒன்று சேரும். உறவினர்கள் ஒன்று சேரும் இந்த நாளில்தான் பல திருமணங்களுக்கான அச்சாரங்கள் அரங்கேறும்.

மாட்டு பொங்கல்
மாட்டுப் பொங்கல் நாளில் மாடுகளைக் குளிப்பாட்டி கொம்புகளுக்கு வண்ணம் பூசி மாலை அணிவித்து அவற்றையும் தெய்வமாக கருதி பொங்கல் வைத்து வழிபடுவது தமிழர் பண்பாடு. தமிழர்களின் செல்வமாக போற்றிப் பாதுகாக்கப்படும் மாடுகளை தெய்வங்களில் ஒன்றாக கருதியே இந்த திருவிழாவே நடைபெறுகிறது.

கட்சி கொடி நிறங்கள்
அதுவும் அரசியல் கட்சிகளில் இருப்பவர்கள் தங்கள் கட்சி கொடிகளின் நிறத்தை மாடுகளின் கொம்புகளுக்கு பூசி அழகுபார்க்கிற வழக்கம் தமிழகத்தில் இன்றளவும் இருக்கிறது. இதையொட்டியே ஏறுதழுவுதல் எனப்படும் சல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் மாடுகளை துன்புறுத்துவதாக கூறி சல்லிக்கட்டுக்கு முதலில் தடை விதித்தனர்.

சல்லிக்கட்டு புரட்சி
ஒட்டுமொத்தமாக தமிழகமே கிளர்ந்தெழுந்து சல்லிக்கட்டுப் புரட்சியை நடத்தியது. இதனால் சல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா தலைதெறிக்க தப்பி ஓடியது.

கொம்புகளுக்கு வர்ணம் பூச தடை
இப்போது மாடுகள் வெட்ட தடை, விற்பனைக்கு தடை, எருமை மாடுகளை பலியிட தடை... அத்துடன் மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசினாலும் சிறை என எதேச்சதிகாரமான உத்தரவை பிறப்பித்திருக்கிறார். இத்தகைய உத்தரவால் தமிழர்களின் பண்பாட்டு விழாக்களில் ஒன்றான மாட்டு பொங்கல் கொண்டாட முடியாத நிலையை உருவாக்கியுள்ளனர். இது தமிழகத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications