"SC தான நீங்க".. ஜாதியோடு கூடிய கிராமத்தின் பெயரை மாற்றக்கோரி இன்று தேர்தல் புறக்கணிப்பு
விருதுநகர்: தமிழக சட்டசபை தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் கிராமத்தின் பெயரில் உள்ள ஜாதியின் பெயரை நீக்க வேண்டும் என்று கூறி தேர்தலை புறக்கணிப்பதாக பரச்சேரி எனும் கிராமத்தை சேர்ந்த மக்கள் அறிவித்துள்ளனர்.
சமூகத்தில் மட்டுமின்றி பெயரிலும் புறக்கணிக்கப்பட்டு இருக்கும் கடைக்கோடி கிராமத்தின் கதை தான் இது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம் தவிழ்ந்தான் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் தலித் மக்கள் வசிக்கும் கிராமம் உள்ளது. அதன் பெயர் பரச்சேரி.

தலித் மக்கள் வசிப்பதை அடையாளப்படுத்தும் வகையில் இந்த கிராமத்தின் பெயர் உள்ளது. அரசு ஆவணங்களிலும் இந்த பெயரே பதிவாகி உள்ளது. இதனை மாற்றம் செய்ய வேண்டும் என்று அந்த கிராம மக்கள் கடந்த 15 ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இன்று வரை யாரும் செவிசாய்க்கவில்லை.
இதனால் அங்கு வசிக்கும் தலித் மக்கள் இன்று நடக்கும் சட்டசபை தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இதுபற்றி அந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் கூறுகையில், ''தலித் மக்கள் வசிக்கும் பகுதி என்பதால் பரச்சேரி என பெயர் உள்ளது. இந்த பெயரை மாற்றம் செய்ய வேண்டும். எங்கள் கிராமத்துக்கு வடக்கு அச்சம் தவிழ்ந்தான் என பெயர் வைக்க வேண்டும் என போராடி வருகிறோம். ஆனால் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தேர்தலை புறக்கணிக்க உள்ளோம்'' என்று கூறியுள்ளனர்.
இதுபற்றி அங்கு வசிக்கும் குமார் என்பவர் கூறுகையில், ''தனி மனிதனை ஜாதி பெயர் வைத்து அழைக்க கூடாது என்று சட்டம் உள்ளது. ஆனால் கிராமத்தின் பெயரே ஜாதியை குறிப்பிடும்படியாக உள்ளது. ஆனால் கிராமத்தின் பெயரையே பரச்சேரி என சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?'' என தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
அதேபோல் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் பிரதீபா கூறுகையில், '' நான் பணி தேடியபோது என் முகவரியை பார்த்ததுமே ஜாதியை புரிந்து கொண்டு காலியிடங்கள் இல்லை. அடுத்து காலியிடங்கள் வரும்போது அழைக்கிறோம் என்று கூறியுள்ளனர். மறுநாள் என்னுடைய தோழி இண்டர்வியூ சென்றார். அவர் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர். அவர் தேர்வு செய்யப்பட்டார். அந்த பொண்ணுக்கு தான் மரியாதை இருந்தது. அதிகமான மதிப்பெண் எடுத்து இருந்தாலும் ரிஜெக்ட் செய்துள்ளனர்'' என்றார்.
இந்த கிராமத்தின் பெயர் மட்டும் பிரச்சனை இல்லை. அங்கு அடிப்படை வசதியும் இல்லை. சமூகநீதி பேசும் தமிழகத்தில் தங்களின் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்பதற்காக இன்று நடக்கும் சட்டசபை தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கிராமத்தின் முக்கிய இடத்தில் பேனர் வைத்துள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications