காரைக்குடி பள்ளியில் பெற்றோர் ஆசிரியர்க் கழகக் கூட்டம்
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர்க் கழகக் கூட்டம் நேற்று (15.10.2016) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பெற்றோர் ஆசிரியர்க் கழகத் தலைவர் சகாய அமலன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் பீட்டர் ராஜா அனைவரையும் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் முதல் பருவத்தில் மாணவர்களின் கற்றல் திறன், வகுப்பறையில் மாணவர்களின் செயல்பாடு, மாணவர்களின் வருகை, கையெழுத்துத் திறன் பற்றி ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.

ஆசிரியர்கள் கற்றலில் பின்னடைவுள்ள மாணவர்களை, கற்றலை மேம்படுத்தும் வழிகளைக் கூறி பெற்றோருடன் கலந்து ஆலோசித்தனர். மேலும் மாணவர்களின் படைப்புகள் பெற்றோர்கள் அறியும் பொருட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

இக்கூட்டத்தில் இரண்டாம் பருவத்திற்கான பள்ளி வளர்ச்சித் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை எஸ். விஜயலட்சுமி மற்றும் மு. கோமதி செய்திருந்தார்கள்.

-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications